Posts

Showing posts from December, 2016

கூழாங்கற்கள் - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் பார்வையில்

Image
உப்புக்காற்றும் ‘அழகான” தண்டனைகளும்
கனவுப்ரியன்: நடைப்புழுதியில் கால்கள் இருக்க விரும்பும் மனதின் கதைகள் சுப்ரபாரதிமணியன்


இன்றைய முகநூல் எழுத்தாளர்களின் ஆதர்சமாக சுஜாதா இருக்கிறார். அவரின் வேகம் எடுக்கும் எடுத்துரைப்பு மொழியும் வார்த்தைகளின் குறுக்கலும் இன்றைய இளைஞர்களின் உரைநடைக்கும் மனோபாவத்திற்கும் ஏதுவாக இருக்கிறது. சொல்வதை அடுத்த நொடியில் சொல்லிப்போ என்ற தவக்களப்பாய்ச்சல்  வேகம்,  நடை மனபரபரப்பு இன்றைய வெகுஜன தளத்தில் இயங்கும் இளைஞர்களிடம் காணலாம் .  
இந்தப்பரபரப்பையும் வேகத்தையும் கனவுப்ரியனிடன் காணலாம்.முகநூல்களில் அதிகம் எழுதியவை அப்படியே நின்று போகாமல்  சிறுகதைகளாக்கிய முயற்சியில் வெற்றி கண்டிருக்கின்றன. ஆனால் விஸ்தாரமான அனுபவங்கள், அடர்த்தியான நடைமுறை வாழக்கை அம்சங்கள் அந்த வேகத்தினை நிதானப்படுத்தி கதை சொல்ல வைக்கின்றன.. 
அயலக வாழக்கை அனுபவம் என்ற அளவில் அ.முத்துலிங்கம் உட்பட  பலரின் அனுபவதிரட்சிகளை இவரும் கொண்டிருக்கிறார்,. ஆனால் முத்துலிங்கம் போன்றோர் நிதானமொழியில் அடுக்கும் வித்தையில் வேறொரு பரிமாணத்தை எட்டி விடுவார்கள். 
சுருக்கமாகச் சொல்ல வேண்டும், இயல்பான வேகமெடுக்கும்  மொழி…

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்

Image
திரு.வா.மு. கோமு அவர்களின் பார்வையில் " கூழாங்கற்கள் " புத்தகம்.
முற்றிலும் புதிய களன்களில் சிறுகதைகளை வாசித்தது மொழிபெயர்ப்புகள் வாயிலாகத்தான். கொஞ்சமாய் பெயர்ப்பு சரியில்லையெனில் அப்படியும் சிரமப்பட்டேனும் வாசித்து முடித்து விடுவேன். புலம்பெயர் ஆக்களின் புத்தகங்கள் கொஞ்சம் சோகம் நிரம்பிய வாழ்க்கைப் பதிவுகளாகவே வாசிக்க முடிந்தது. போக புலம்பெயர் ஆக்களின் புத்தகங்களை ஆறாவடு வாசித்த பிறகு நிப்பாட்டிக் கொண்டேன். கடலில் கள்ளத்தோணியில் செல்கையில் வாந்தியெடுத்தார்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளிக்கிடும்போது. சும்மாவே எனக்கு வாந்தி வந்துவிடும் போல தான் இருந்தது. முன்பாக (6 வருடம்) தமிழில் முதல் அரவாணியின் எழுத்து, வாழ்க்கை, நாவல் என்று வரிசையாக வரத்துவங்கிய சமயம் ஒரே புத்தகம் மட்டுமே வாங்கி வாசித்து நிப்பாட்டிக் கொண்டேன். (ஒன்றையே திரும்பச் சொல்லல்!) கனவுப்பிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்கு மதியம் இரண்டு மணிக்குத்தான் கைக்கு கிட்டியது. கி.ரா-வின் சின்னக் குறிப்பு பின் அட்டையில் இருக்க கிராமியத்தகவல் களஞ்சியமாக இருக்கப்போகிறதென்ற ஆர்வத்தில் முதல் கதையில் நுழைந்தேன். (முன்னுரைகள் …

கூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்

Image
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருது பெற்ற என் ஆசான்களில் ஒருவரானஎழுத்தாளர் உதய சங்கர் அவர்களுக்கு நன்றி
தமிழுக்கு நல்வாய்ப்பு! மத்திய தரவர்க்கத்து மன அவசங்களையே நுணுக்கி நுணுக்கி எழுதிக்கொண்டிருந்த கடந்த காலகட்டத்திலிருந்து புதிய அலைகளுடன் இதுவரை கண்டிராத புதிய பிரதேசங்களுடன், புதிய மனிதர்களுடன், மாறிவரும் புதிய மனநிலைகளுடன் புதிய எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.
கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் கதைத்தொகுப்பும் அப்படி ஒரு புத்தம் புதிய கதைக்களத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதுவும் சர்வதேச கதைக்களம். அதிகம் பேசப்படாத அரபிக்களம். பாகிஸ்தானிகள் வருகிறார்கள். பிலிப்பைனி பெண் வருகிறாள். பெல்ஜியம் நாட்டுப்பெண் வருகிறாள். அரபிப்பெண்கள் வருகிறார்கள். பாலஸ்தீனி நாட்டுக்காரர் வருகிறார். இப்படியொரு சர்வதேச கதைக்களன் தமிழுக்குப் புத்தம் புதிது. முதலில் இதற்காகவே கனவுப்பிரியனை வாழ்த்துவோம். கூழாங்கற்கள் கதைகளின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய கதைசொல்லி கிடைத்திருக்கிறார். கனவுப்பிரியனின் கதைக்களத்தை இரண்டு விதமாகப்பிரிக்கலாம். சொந்த நாட்ட…

கூழாங்கற்கள் - எழுத்தாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து

Image
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் - கதை சொல்லி இணை ஆசிரியர், திமுக செய்தித் தொடர்பாளர், உயர் நீதி மன்ற வழக்கறிஞர் அவர்களின் வாழ்த்து 

எங்களின்தெற்குச்சீமைநாற்றாங்காலில்துளிர்விட்டுள்ள, அன்புக்குரியகனவுப்பிரியனின்படைப்புகள்யாவும்கவனத்தைஈர்க்க்க்கூடியது. ஒருபடைப்பாளிஇயற்கை, சமுதாயம், மக்கள்பிரச்சனைகளின்மீதுஅக்கறையும்ஆர்வமும்இருந்தால்தான்தன்னுடையஆக்கப்பணிகளில்வெற்றிபெறமுடியும். கனவுப்பிரியன்அதற்குஇலக்கணமாகத்திகழ்பவர். பாரதியைஆதர்சனப்புருசனாக்க்கொண்டு,