Posts

Showing posts from January, 2017

கூழாங்கற்கள் புத்தகம் பற்றி தோழர் வித்யா குருமூர்த்தி பார்வையில்

Image
கனவுப் பிரியன் அவர்களின் "கூழாங்கற்கள்" சிறு கதைத் தொகுப்பு : போன மாதம் ஸ்பீட் போஸ்டில் பெற்ற 3-ஆம் நாளே புத்தகத்தை முழுவதுமாக சிட்டி ரோபோ ஸ்டைலில் சர்ர்ர்ரென அட்டை டு அட்டை படித்து முடித்தாகி விட்டது. இருந்தாலும், இன்னும் 2 முறை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆற அமர அனுபவித்துப் படித்தேன். ரிவியூ எழுதும் அளவெல்லாம் நான் பெரிய ஆள் இல்லை என்றாலும், புக்கில் என்னைக் கவர்ந்த சில விஷயங்களைப் பகிர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போஸ்ட். 1. மொத்தம் 21 கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணி வைத்து எழுதப் பட்டது. கனவுப் பிரியனின் நட்பு வட்டத்தில் இருப்பதால் அவர் எழுத்து நடை பரிச்சயமான ஒன்றுதான். எனினும், முக நூல் பதிவுகளைக் காட்டிலும், புத்தகத்தில் முதிர்ந்த எழுத்தாண்மை மற்றும் தொய்வில்லாத நடை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. 2. என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் - கதை தொடங்குவது ஓரிடம் முடிப்பது அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வேறொரு புள்ளியில். ஆனாலும், இந்த 2 பாயிண்ட்டுகளையும் அழகாக பேலன்ஸ் செய்து, அதை ஒரு குறையாக நமக்கு தோன்ற விடாதது சிறப்பு. 3. அடுத்த விசேஷம் - எல்லாக் கதைகளிலும் டீ…

கூழாங்கற்கள் புத்தக வெளியீடு பற்றி ஜன்னல் இதழில்

Image
ஜன்னல் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த சனிக்கிழமை மாலை எழுத்தாளர் கனவுப்பிரியனின் “கூழாங்கற்கள்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. கரிசல்குயில்கள் திருவுடையான், கிருஷ்ணசாமி ஆகியோர்களது கிராமியப் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சியில், உமாகாந்தி ரத்னவேல் நூலை வெளியிட எழுத்தாளர் அர்ஷியா, ராபியா கனவுப்பிரியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவுக்குத் தலைமைதாங்கிய திருவுடையான் மற்றும் வெ.சுப்ரா, மருத்துவர் .ராமானுஜம் , பேராசிரியர் சவுந்தர மகாதேவன், கவிஞர் கிருஷி , எழுத்தாளர் அர்சியா, தீபா நாகராணி, வழக்கறிஞர் தீன் ஆகியோர் சிறுகதைகள் குறித்து மதிப்புரை வழங்கினர்.

விழாவில் பேசிய கவிஞர் கிருஷி, “இந்த அரங்கத்தில் எல்லா மதத்து மக்களும் எத்தனை இயல்பாக அமர்ந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தானே நம் தேசமும் நல்லிணக்கத்தோடு இருக்கிறது. அதன்மீது மதச்சாயம் பூசுகிறவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள். மனிதநேயத்தை வலியுறுத்தும் கனவுப்பிரியனின் சிறுகதைகள் அனைத்தும் அனுபவங்களால் எழுதப்பட்டிருப்பவை. அவை நிச்சயம் வாசிக்கப…

கூழாங்கற்கள் புத்தக வெளியீடு நிகழ்ச்சி - you tube லிங்க்

Image
‘கூழாங்கற்கள்’ புத்தகத்துக்கு இன்னுமொரு மகுடம் – சூட்டியவர் திரு நாறும்பூ நாதன் &திரு நெல்லை முத்தமிழ் (கதிர் தொலைக்காட்சி). 5.3.2016இல் நடந்த நிகழ்ச்சியை 12 (பனிரெண்டு) பாகங்களாகப் பிரித்து அழகாக You Tube இல் ஏற்றி இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். இதில் கலந்து கொண்டவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். இணைப்புகள்: பகுதி 1
https://www.youtube.com/watch?v=6S4YXd2_weE&feature=share பகுதி 2
https://www.youtube.com/watch?v=D4YDm3hn3Jw&feature=share பகுதி 3
https://www.youtube.com/watch?v=3MBLZmpdwYw&feature=share பகுதி 4 https://www.youtube.com/attribution_link… பகுதி 5
https://www.youtube.com/attribution_link…
பகுதி 6
https://www.youtube.com/watch?v=7IptnEF3GyI&feature=share பகுதி 7
https://www.youtube.com/watch?v=_iC3tmLtvso&feature=share பகுதி 8

கூழாங்கற்கள் புத்தகம் பற்றி ஆயிஷா ரபீக் அவர்கள்

Image
நம்பிக்கை நட்சத்திரம்.
ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே!!
ஒற்றை தூறலுக்குப் பின்
ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும்
பட்டமரம் போல துளிர்க்கிறது
சிறகுதிர்ந்த என் நம்பிக்கை
சின்னவள் உன் குரல் கேட்டு!

படித்த பெண்கள் இன்று பலருண்டு
உன் போல் படிக்கும் பெண்கள்
தான் சொற்பம்!!

அழகுக்குறிப்பு,ஐந்தாறுவகை கூட்டு
ரங்கோலி மற்றும் ராசிபலன் என
அடுக்கிய பெண்ணிதழ்கள் கண்டு
அயர்ந்திருந்த வேளையிலே
இலக்கியம் பேசும் உன் இனிய குரல் கேட்டு
கண்நிறைய பார்க்கின்றேன்- என்
கரும்பலகையில் விரிந்திருக்கும் வெண்மலர்களை!!

கண்ணுக்கு மைபூசி
கருங்கூந்தல் நெய்பூசி
பெண்ணுக்கு அணிசெய்யும்
பெற்றோர்கள் வரிசையிலே ..

கைகளிலே நூட்கள் தந்து
கருத்தினிலே நுட்பம் விதைத்து

கூழாங்கற்கள் புத்தகம் பற்றி மாதவன் ஸ்ரீரங்கத்தின் வாசிப்பு அனுபவம்

Image
கூழாங்கற்கள்...
__________________
வெகுநாட்களாக அலமாரியில் இருந்தபடி என்னை கைநீட்டி அழைத்துக்கொண்டிருந்தகனவுப் பிரியன்இன்#கூழாங்கற்கள்புத்தகத்தினை இன்றுதான் வாசிக்கமுடிந்தது.


புத்தகத்தின் முன்னுரையில் கி.ரா எழுதியிருப்பதுபோல, முதல் மற்றும் இறுதிக்கதைகளை மட்டும் வாசித்துவிட்டு 'தொடர்ந்து இவர் எழுதலாம்' என்பதுபோல தட்டையாக புத்தகம்பற்றி ஏதேனும் எழுதிவைப்பதற்கு சும்மாவே இருக்கலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் அப்பொழுது தான் வெளிவரும் ஒரு புத்தகத்திற்கு வேறெப்படி முன்னுரை எழுத இயலுமென்றும் கேள்வியெழுகிறது.

நிற்க, ஃபேஸ்புக்கை பொறுத்தவரை கனவுப்ப்ரியனின் சரளமான எழுத்தாற்றல் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். கட்டியங்களே அவசியமில்லை. ஆயின் ஒரு தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகம் கொஞ்சம் திருப்தியையும் கொஞ்சம் ஆதங்கத்தினையும் உருவாக்கிவிட்டது.

ஏனெனில் கதைக்களம் மற்றும் கதைசொல்லும் உத்தி, சுவாரஸ்யமான நடை எவற்றிலும் மேலதிகப் புதிய முயற்சிகள் எதையும் செய்துவிடவில்லை எனும் ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, ஏதோ மிகுந்த அவசரம் காரணமாக வெளியிட்ட ஒரு தொகுப்பாகவே இது எனக்குத் தோன்றியது. தன்னளவில் ம…

கூழாங்கற்கள் புத்தகம் பற்றிய ராஜ சேகர் அவர்கள் பார்வை

Image
கூழாங்கற்கள் என் பார்வையில்.......

ஐயப்பனை பொறுத்தவரை இந்த மடம் இல்லைனா சந்த மடம் 

சில தண்டனைகள் அழகான தண்டனைகளாக மாற கால அவகாசம் தேவைப்படுகிறது.

படிச்சிக் கல்யாணம் பண்ணி, பிள்ளைப் பெத்து, இழுத்துக் கிட்டு கிடந்து, சாவுறது மட்டும் தான் வாழ்க்கைனு யாரு சொன்னா?

உப்புக்காற்று அதற்கே உரித்தான பிசுபிசுப்புடன்
வீசிக்கொண்டிருந்தது, முகத்தில்.

இதோ ஒரு புதுப்பணக்காரன்
கையில் கொட்டோகொட்டு என கொட்டுகிறது என்றால் அது, நிச்சமாய் உழைத்த காசாக இருக்காது என்பது நினைவில் இருந்தால் போதும்.

வாழ்வில் சில நேரம் பெரிய அசம்பாவிதங்களை தவிர்க்க சில விபத்துகள் தேவையாய் இருக்கின்றன.

இதெல்லாம் கனவுப் பிரியன் அவர்கள் எழுதிய கூழாங்கற்கள் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கதைகளின் முடிவுகள்.

அவர் வாழ்க்கையில் நடந்தவைகளை தொகுத்து கற்பனைபளைப் புகுத்தி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுவோடும் இந்த கூழாங்கற்களை படைத்திருக்கிறார். கதைகளுக்கு முடிவு மிகவும் முக்கியம். அதை சரியாகச் சொல்லும் போது படைப்பாளனின் வெற்றி இருக்கிறது. அதைச் சரியாக கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார் எழுத்தாளர் கனவுப் பிரியன்

திக்குவாய் பாலா, வடிவு, பலவேசமுத்து, ரபீக் , க…