Posts

Showing posts from February, 2017

சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்களின் மதிப்புரை

Image
சுமையா - கனவுப்பிரியனின் இரண்டாவது தொகுப்பு
------------------------------------------------------------------------------
21 கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் " எட்டாவது அதிசயம் " என்றொரு கதையை ஆக சிறந்த கதை என்று சொல்வேன்.
மாறுபட்ட கதைக்களம்.

ராணுவத்தில் கர்னல் ரேங்கில் பணியாற்றிய ஒருவரின் கதை. 21 ஆண்டுகள் பணிபுரிந்து கால் எலும்பு முறிந்து, மனைவியை இழந்து, மகளும் சண்டையிட்டு பிரிந்து போன நிலையில், தன்னந்தனியே வாழும் அந்த மனிதருக்கும் , பூங்காவில் தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒரு இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடலே இந்தக் கதை.

அவர் வீட்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்து அந்த இளைஞன் இது என்ன இடம் என்று கேட்க, இமாலய உச்சியில் லடாக் பகுதியில் இருக்கும் காரகோரம் என்ற ஊர் என்று சொல்லி, அது உலகின் எட்டாவது அதிசயம் என்று அதன் கதையை விவரிக்கிறார்.
காரகோரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாட்டை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்தியா, இன்னொரு பக்கம் பாகிஸ்தான், மற்றொரு பக்கம் சைனா, பிறிதொரு பக்கம் ஆப்கானிஸ்தான் என. இந்த மலையுச்சியில் ரோடு போடும்போது ஆயிரக்கணக்கில் இறந்த மனிதர்கள…

சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தின்னு மதிப்புரை

Image
கனவுப்பிரியனின் "சுமையா" நேற்றிரவு வாசிக்கத் தொடங்கினேன். இன்னதெல்லாம் எழுதுகிறேன் என்று மூச்சுச்சத்தம் கூட வெளியேவிடாமல் அள்ளித் தெளித்திருக்கிறார். உண்மையில் கூழாங்கற்கள் வாசித்துவிட்டு நான் எதுவுமே எழுதவில்லை.

பிறகு, கொஞ்சக்காலம்
'மண்ணைத்தொட்டு, காலை எடுத்தடித்து உப்புக்கோட்டைத் தாண்டி கபடி ஆடுகிற மனுசனின் கதைகளில்' மெஷின்களாய் வந்து குடிகொண்டதும் நான் அவர் பதிவுகளின் வாசிப்பில் இருந்து ஒருசின்ன நகர்தலை மேற்கொண்டு விட்டேன். நமக்குப் புரிபடுகிற விஷயத்தில்தானே நம் ரசனை நிற்கும்.

ஆக, அந்த இடைவெளி அப்படியே இருந்தது. நேற்று அவருடைய இரண்டாம் தொகுப்பான"சுமையா"
வாசிக்கிறபோது அதுவும்
தகர்ந்துபோனது. நேர்மையாகச் சொன்னால் கனவுப் பிரியனின் நான் தனிப்பட்டு இன்னதை எழுதுங்கள் என்று எதிர்ப்பார்த்திருக்கக் கூடாது. அது ஒரு அதிகபட்ச அன்பினாலும் உரிமையிலும் நிகழ்ந்துவிட்ட சம்பவம்.

உண்மையிலே அவரது வட்டம் பெரியது. அவரது கதைகளும்கூட பெரும்பாலும் உலகளாவிய பார்வையோடிருப்பவை. உலக, மதத் தத்துவங்களையும், அரசியல் சிக்கல்களையும் கூட வெண்ணெக்கட்டியை வெட்டி எடுத்து பிரித்து வைக்கிற மாதிரி அதன…

சுமையா புத்தகம் பற்றிய கவிஞர் தணிகை அவர்களின் மதிப்புரை

Image
சுமை(ய்)யா பற்றிய கவிஞர்Tanigai Ezhilan Maniamஅவர்களின் மதிப்புரை. கனவுப் பிரியனின் முதல் முயற்சியான "கூழாங்கற்களை" படித்த போதே ஒரு சிறுகதை மன்னர் உருவாகிறார் என்ற அறிகுறி தெரிந்தது. ஆனாலும் அது கன்னி முயற்சியாகவே தெரிந்தது. அதன் தயாரிப்பு நேர்த்தியை விட இப்போது வந்திருக்கும் அவரின் "சுமையா" என்ற இரண்டாம் குழந்தை அருமையான சுகப் பிரசவமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிட வேண்டும் என நானும் முயன்றதுண்டு. ஆனாலும் அது 2010க்கும் பின் முடியாமல் போயிற்று. இவருக்கு எல்லாம் வல்ல இயற்கை அருள் செய்யட்டும் ஆண்டுக்கொரு நூல் இவரது காலம் வரை வெளியிட... இவரின் எழுத்துகளை முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தோம், இப்போது நூல் வாயிலாக படிக்கிறோம். இந்த நூலைப் படித்தபின் உணர்வது என்ன எனில் இவர் நாவல் கூட எழுதலாம் அந்த வல்லமை இவரிடம் வந்து விட்டது.அந்தளவு இவரது எழுத்தில் ஒரு மேன்மை பக்குவம் மெச்சூரிட்டி வந்துள்ளது. உறவுகள்,காதல், நகைச்சுவை,தொழில் நுட்பம், விழிப்புணர்வுக்கான புதிய செய்திகள், சமூக மேம்பாட்டுத் தா(க்)கம்,அறிவியல் ஆகியவை இவரது கதைகளில் உலகளாவிய பார்வையுடன், நிலம், ந…