Posts

Showing posts from March, 2017

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

Image
சுமையா கதை நூலைத் எழுத்தாளர் நாறும்பூநாதன் வழியாகப் பெற்றேன்.  நுனிப்புல் மேய்ந்தேன்.எதிர்பாரா நிலையில் சூழல் மாறியதால் நுனிப்புல் மாறி மேய்ச்சலுக்குள் சென்றேன். கனவுப்பிரியனின் கைகளில் கோலும் தாளும் இணையராக இருப்பதனால் எழுத்துகள் எல்லோரையும் கவரும் வண்ணம் கதைப்போக்கு உள்ளதாக அறிகிறேன். 1. சுமையா: ஊடகங்கள் மூலம் நமக்குள் வன்மம் புகுத்துவது அரசியல்வாதிகள் தான் எனும் அழுத்தமான உண்மையைப் படிக்கும் போது அரசியலின் அழுக்கைக் காட்டிச்செல்கிறது. விவசாயி: உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் உழவன் (விவசாயி)மெலிந்தே காணப்படுகிறான் எனும் போது உழவர்களின் உலகத்தில் இருள் மட்டுமே கவ்விக்கொண்டுள்ளது எனும் சிந்தனை எனக்குள் தோன்றியது. கதைப்போக்கின்படி திருமணம் ஒன்றை நிறைவேற்றிய கரு இருப்பதை அறிந்தேன். நிராகரிக்கிறாள் சுமையா திருமணத்தை. ஆனால் அவளின் வாழ்க்கையில் இல்லறத்துணை வேண்டும் என்பதை ஆயிஷா மிக அழகாக கொண்டுபோகும் கதைப்போக்கு அழகாக இருக்கிறது.  மெஹரிடம் ஆயிஷா சுமையா திருமணம் பற்றிச் சொல்லும் போது எந்த அளவில் மெஹருக்குள் ஆனந்தம் கூத்தாடியிருக்கும் என நினைக்கிறேன். அ

சுமையா புத்தகம் பற்றி தோழர் ராமுண்ணி பிரேம்சந்த் அவர்களின் வாசிப்பனுபவம்

Image
கனவுப் பிரியனின் "சுமையா" படித்து முடித்தேன். கூழாங்கற்களை கீழே வைக்காமல் முழு இரவில் படித்து முடித்த மாதிரி இதை படிக்க இயலவில்லை. சுமையா முழுவதும் படித்து முடித்ததில் இருந்து மனதுக்கு கொஞ்சம் சுமையா இருக்கிறது. அவரின் 21 கதைகளில் இம்முறை பாதிக்கு மேல் மனதை வருத்தியது.  உலகின் ஒவ்வொரு மூலையிலும் வித விதமான துரோகம் , சண்டை , மனக் கலக்கம் , எப்போதும் சந்தோஷமே நாடும் எனக்கு இக் கதைகளை படித்த போது என் மேல் எனக்கே கோபம் வந்தது.  எதையும் அறியாமல் யார் வருத்தமும் என்னை தாக்காமல் என் வாழ் க்கை , என் இன்பம் என்று இருந்திருக்கிறேனே என்று. உலகம் சுற்றிய நான் சந்தோஷங்களை மட்டும் அனுபவித்து விட்டு விட்டேற்றி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். ப்ரியனின் அந்த கதாபாத்திரங்கள் என் கண்களை திறந்திருக்கின்றன. மற்றபடி உலகின் பல நாடுகளையும் சுற்றி பார்த்த உணர்வை இந்த சிறுகதை தொகுப்பும் கொடுத்தது. நாடுகள் என்பது மனிதர்களால் அவர்களின் நடவடிக்கைகளால் ஆனது தானே. நன்றி கனவுப் பிரியன். அன்பும் நன்றியும்   Vazhayil Ramunny Premchand   சார்

சுமையா புத்தகம் பற்றி தோழர் மேகலையின் வாசிப்பனுபவம்

Image
# சுமையா புத்தகத்தின் முதல் கதையே புதிய ஊரை அறிமுகப்படுத்தி , அழகான நடையில் , பல புதிய தகவல்களோடு , புதிய களத்தில் சொல்லி இருப்பது இந்த எழுத்தாளன் நிச்சயம் வித்தியாசமான கதை சொல்லி தான் என்பதை உரக்கச் சொல்கிறது. கதையில் நான் வியந்த , ரசித்த , அறிந்து கொண்டவைகளை குறிப்பிட விரும்புகிறேன்.. ' நிர்வாகம் கொடுக்கும் வேலைகளை மட்டும் செய்யாமல் சுய ஆவலில் இழுத்துப் போட்டு சில வேலைகளை செய்தால் பணி உயர்வுடன் கூடிய வேலை மாற்றலும் கிடைக்கும் ' இது இன்றைய இளவட்டங்கள் கவனிக்க வேண்டியதும் பின்பற்ற வேண்டியதும்! ப்ரியனின் இந்த உயரத்தின் அனுபவ வெளிப்பாடாகவும் எடுத்துக் கொள்ளலாம். ' வெளியே இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு வரும்போது அதிக அன்பு கிடைக்கும்.அதை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்..மீண்டும் ஊர் சென்றதும் அசை போட்டுத் திருப்தி அடைய.. ' குடும்ப முன்னேற்றத்திற்காக நாடு கடந்து பணிபுரியும் அனைத்து ஆண்களின் "அன்பின் ஏக்க" வார்த்தைகள் இவை. ஒரே மாதிரியான செக்குமாட்டு வாழ்க்கையில் " எங்கேயாவது இந்தா இப்படிப் போற மாதிரி போகனும்..கொஞ்சம் எல்லாத்தையும் மறக

சுமையா புத்தகம் பற்றி தோழர் தங்கம் வள்ளிநாயகம் அவர்களின் வாசிப்பனுபவம்

Image
" சுமையா கதைப்புத்தகத்திலிருந்து ..." எழுத்தாளர் திரு. கனவுப் பிரியன் அவர்களின் நூலான "சுமையா "வில் எனக்குப் பிடித்த கதையில் நான் ரசித்த  பகுதிகள் இதோ உங்களுக்காக..!! இது ஒரு இலக்கிய நிகழ்வுக்கு வழிகோலியதால் இக்கதையினைத் தேர்வு செய்தேன். கதையும்  விமர்சனமும் சேர்ந்தே இருப்பதால் சற்று நீளமான பதிவே. பொறுமையாக மூச்சு விட்டு படிக்க  வேண்டுகிறேன் . கதையின் தலைப்பு  : "நேற்றைய ஈரம் " ஒரு காதலன் , காதலி , நண்பன் இந்த மூன்று பேருக்கும் இடையே நிகழும் கதை . அழகான காதலன் , தன் சுமார் மூஞ்சி குமார் நண்பனுடன் ' ரைஸ்மில் ' நோக்கிச் செல்லும் தன் காதலியை சைக்கிளில் தொடர்கிறான். ' அவளிடம் என்ன பேச என நண்பனிடம் யோசனை கேட்கிறான் '- காதலன். ' ஹலோ மாவரைக்கப் போறீங்களா.. ? என ஆரம்பித்து , பின் காய்கறிக்கடை , கோவில் , பஸ் ஸடாப் , ஸ்கூல் வாசல் என நீள்கிறது. தன்னைப் பார்த்து சிரித்த காதலியைப் பார்த்து சந்தோஷப்பட்டு (கிரீன் சிக்னல் கண்ட கார்க்காரன் போல ) தன் நண்பனிடம் ' ஏதாவது எழுதித் தாடா ' என்ற கெஞ்சலுக்குப் பி