Posts

Showing posts from 2017

மாலா பாலு புத்தக தினம் அன்று தேர்ந்தெடுத்த வாசிப்பு புத்தகத்தில் " சுமையா "

https://m.facebook.com/story.php?story_fbid=10154414854806700&id=589911699

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்

Image
கதை 1 - சுமையா : கதையோட ஒன்லைன் பார்த்தால் சாதாரணம். 27 வயது திருமனம் ஆகாத சுமையா அவள் சித்தி ஆயிஷா சுமையாவின் தங்கைக்கு வந்திருக்கும் வரன் என ஒரு போட்டோ காட்டுகிறாள்.... பின் சில சம்பாசனைகளில் சுமையா தானும் ஏன் மனம் செய்துக்கொள்ள கூடாது என எண்ணம் உருவாக... சுமையாவை ஆயிஷா சம்மதிக்க வைக்கிறார். இதில் வழக்கம்போல கடைசிவரிகளில் சுஜாதாவின் முத்திரை சற்றே கவிதை நயத்தோடு.. இந்த சாதாரண 11 பக்கமே உள்ள கதையில் - ஆங்காங்கே அழகான சாரல் போல சில வரிகள்... 1. வாழ்வில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு விதியிடம் மட்டும்தான் பதிலுண்டு. 2. வெளியே இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு வரும்போது அதிக அன்பு கிடைக்கும்...அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் . மீண்டும் ஊர் சென்றதும் அசை போட்டும் திருப்தி அடைய... 3. அன்பின் வடிவம்தானே காதல்... எதைக் காதலிக்கிறோம் என்பதைப் பொறுத்து அதுவும் நான் என்பதை மறக்கடிக்கச் செய்யும் தியானம்தான்.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவரின் வார்த்தை ஜாலத்தை... முக்கியமாக இந்தக் கதையின் பாத்திரப் படைப்பு பற்றி சொல்லியே ஆகவும்... கதையின் நாயகி சுமையாவின் பெயரை தலைப்பாக வைத்

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி விசாகன் தேனி அவர்களின் வாசிப்பனுபவம்

Image
நெஞ்செலும்புக்கு நெருக்கமாகி -------------------------------------------------------- நாம் ஒவ்வொருவரும் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடி நேரமும் ஒரு கதையை உயிர்ப்பித்துச் செல்கின்றன. அவ்வாறாக கதைகள் காற்றுவெளியெங்கும் நீக்கமற நிறைந்து மிதந்து கிடக்கின்றன. அவைகள் காலத்துடன் கலவிகொண்டு மீண்டும் மீண்டும் கதைகளைப் பிரசவிக்கின்றன. கதைகள் வழியே உயிர்கள் ஜனிக்கின்றன , கதைகள் வழியாகவே அவ்வுயிர்கள் மரிக்கின்றன. கதைகளுக்கு நிலம் , கடல் , வனம் , வானம் என வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது. கடலின ் ஆழம் அளக்கப்பட்டதைப் போல கதையின் ஆழ அகலம் அளக்க முடியாது. கதைகளுக்கு நிகர் கதைகளே. கதைகளின் விசையால் சுழலும் இப்புவி ஓர் கதைக்கோள். கனவு பிரினின் சுமையா என்ற கதைத் தொகுப்பிலுள்ள கதைகளும் அகத்திலும் புறத்திலும் அதனதன் எல்லையற்ற தன்மையை நிரூபிக்கவே எத்தனிக்கிறது. அவைகள் திட்டம் தீட்டுகின்றன , களம் காண்கின்றன , மதி மயக்குகின்றன , மனத நேயம் புகட்டுகின்றன , வாழ்க்கையை வெல்லக் கற்றுக்கொடுக்கின்றன , தோல்வியை ஏற்க பழக்குகின்றன. என்ன காரணத்திற்காக என்று தெரியாமலேயே மனித மனங்களுக்குள் உறைந்து கிடக்கின்ற அல்லது ம

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்

Image
” சுமையா “ – கனவுப் பிரியன் [ சிறுகதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம்  . ரொம்பச் சின்ன வயதில் திரும்ப … பம்ருதி … திரும்ப வாசித்தவைகளில் பிரதானமானது சிந்துபாத் கதைகள்தான் . அதிலும் குறிப்பாக அவற்றில் வரும் “ பறக்கும் மாயக் கம்பளம் “ மனதில் திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கும் . அப்படி ஒரு மாயக் கம்பளம் கிடைத்தால் சிந்துபாத் போல நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வரலாமே என்ற சிறு பிள்ளைத் தனமான ஆசை . பறக்கும் கம்பளம் எல்லாம் கிடையாது , பறக்க வேண்டுமானால் விமானத்தில் ஏறினால்தான் முடியும் என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்னரும் அவ்வப்போது அந்தக் கம்பளம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இப்போது வரை மனதில் இருக்கத்தான் செய்கிறது . அப்படி இருந்தால் இப்போது யாரிடம் இருக்கும் என்று அவ்வப்போது மனதிற்குள் கேட்டுக் கொள்வதுண்டு . கனவுப் பிரியனின் முதல் தொகுப்பை வாசித்த போது , அவரிடம்தான் அது இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது . இப்போது அவரது இரண்டாவது தொகுப்பான சுமையாவை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் உறுதியாகி விட்டது . ஆம் …. அவரிடம்தான் உள்ளது . இல்லையென்றால் சிறுகதை என்ற வடிவத்

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

Image
சுமையா கதை நூலைத் எழுத்தாளர் நாறும்பூநாதன் வழியாகப் பெற்றேன்.  நுனிப்புல் மேய்ந்தேன்.எதிர்பாரா நிலையில் சூழல் மாறியதால் நுனிப்புல் மாறி மேய்ச்சலுக்குள் சென்றேன். கனவுப்பிரியனின் கைகளில் கோலும் தாளும் இணையராக இருப்பதனால் எழுத்துகள் எல்லோரையும் கவரும் வண்ணம் கதைப்போக்கு உள்ளதாக அறிகிறேன். 1. சுமையா: ஊடகங்கள் மூலம் நமக்குள் வன்மம் புகுத்துவது அரசியல்வாதிகள் தான் எனும் அழுத்தமான உண்மையைப் படிக்கும் போது அரசியலின் அழுக்கைக் காட்டிச்செல்கிறது. விவசாயி: உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் உழவன் (விவசாயி)மெலிந்தே காணப்படுகிறான் எனும் போது உழவர்களின் உலகத்தில் இருள் மட்டுமே கவ்விக்கொண்டுள்ளது எனும் சிந்தனை எனக்குள் தோன்றியது. கதைப்போக்கின்படி திருமணம் ஒன்றை நிறைவேற்றிய கரு இருப்பதை அறிந்தேன். நிராகரிக்கிறாள் சுமையா திருமணத்தை. ஆனால் அவளின் வாழ்க்கையில் இல்லறத்துணை வேண்டும் என்பதை ஆயிஷா மிக அழகாக கொண்டுபோகும் கதைப்போக்கு அழகாக இருக்கிறது.  மெஹரிடம் ஆயிஷா சுமையா திருமணம் பற்றிச் சொல்லும் போது எந்த அளவில் மெஹருக்குள் ஆனந்தம் கூத்தாடியிருக்கும் என நினைக்கிறேன். அ