சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்
” சுமையா “ – கனவுப் பிரியன் [ சிறுகதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் . ரொம்பச் சின்ன வயதில் திரும்ப … பம்ருதி … திரும்ப வாசித்தவைகளில் பிரதானமானது சிந்துபாத் கதைகள்தான் . அதிலும் குறிப்பாக அவற்றில் வரும் “ பறக்கும் மாயக் கம்பளம் “ மனதில் திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கும் . அப்படி ஒரு மாயக் கம்பளம் கிடைத்தால் சிந்துபாத் போல நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வரலாமே என்ற சிறு பிள்ளைத் தனமான ஆசை . பறக்கும் கம்பளம் எல்லாம் கிடையாது , பறக்க வேண்டுமானால் விமானத்தில் ஏறினால்தான் முடியும் என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்னரும் அவ்வப்போது அந்தக் கம்பளம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இப்போது வரை மனதில் இருக்கத்தான் செய்கிறது . அப்படி இருந்தால் இப்போது யாரிடம் இருக்கும் என்று அவ்வப்போது மனதிற்குள் கேட்டுக் கொள்வதுண்டு . கனவுப் பிரியனின் முதல் தொகுப்பை வாசித்த போது , அவரிடம்தான் அது இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது . இப்போது அவரது இரண்டாவது தொகுப்பான சுமையாவை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் உறுதியாகி விட்டது . ஆம் …. அவரிடம்தான் உள்ளது . இல்லையென்றால் சிறுகதை என்ற வட...
Comments