“ கோமதி எஞ்சினியரிங் வொர்க்ஸ் “ டெல்லியின் நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி அலுவலக ரோட்டின் திருப்பத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் ஏறி “ துவாரகா போ “ என்றேன். அங்கிருந்துபின் மானேசர் வேறு செல்ல வேண்டும். ஒரே நாளில் வேலையை முடிக்க வேண்டும் என்பதால் வாடகை டாக்ஸி எடுக்க வேண்டியதாயிற்று இல்லையெனில் டிராபிக் தொந்தரவு இல்லாத மெட்ரோ தான்எப்பொழுதும் வசதி. வெளிநாட்டில் இருந்து வேலை விஷயமாக இந்தியா வந்திருக்கும் எனக்கு கொடுப்பட்டிருக்கும் மூன்று நாட்களுக்குள் மூன்று வேலையும் முடித்தாக வேண்டும் என்ற அவசரம். பகல் பதினோரு மணி என்பதால் ரோட்டில் அத்தனை ட்ராபிக் இல்லை. காருக்குள் FM ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. வசந்த் நகர் தாண்டும் போது ரேடியோவில் அந்த பாடல் ஒலித்தது. பங்கஜ் உதாஸ் பாடிய “ சிட்டி ஆயிஹே ஆயிஹே சிட்டி ஆயிஹே“ என்று. சொந்த ஊரை விட்டு விலகி நிற்கும் அனைவருக்குமே அன்றைய மொபைல் இல்லாத காலகட்டத்தில் இந்த பாடல் ஒரு நினைவை கிளறும் ஊர்க் குருவி. கேட்க கேட்க நானும் அந்த பாடலோடு கரைந்து பின்னோக்கி செல்லத் துவங்கினேன். இந்த பாடலை முதன் முதலாக நியூ பாம்பே, வாசியில் விடு...
Posts
Showing posts from November, 2016