கதை 1 - சுமையா : கதையோட ஒன்லைன் பார்த்தால் சாதாரணம். 27 வயது திருமனம் ஆகாத சுமையா அவள் சித்தி ஆயிஷா சுமையாவின் தங்கைக்கு வந்திருக்கும் வரன் என ஒரு போட்டோ காட்டுகிறாள்.... பின் சில சம்பாசனைகளில் சுமையா தானும் ஏன் மனம் செய்துக்கொள்ள கூடாது என எண்ணம் உருவாக... சுமையாவை ஆயிஷா சம்மதிக்க வைக்கிறார். இதில் வழக்கம்போல கடைசிவரிகளில் சுஜாதாவின் முத்திரை சற்றே கவிதை நயத்தோடு.. இந்த சாதாரண 11 பக்கமே உள்ள கதையில் - ஆங்காங்கே அழகான சாரல் போல சில வரிகள்... 1. வாழ்வில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு விதியிடம் மட்டும்தான் பதிலுண்டு. 2. வெளியே இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு வரும்போது அதிக அன்பு கிடைக்கும்...அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் . மீண்டும் ஊர் சென்றதும் அசை போட்டும் திருப்தி அடைய... 3. அன்பின் வடிவம்தானே காதல்... எதைக் காதலிக்கிறோம் என்பதைப் பொறுத்து அதுவும் நான் என்பதை மறக்கடிக்கச் செய்யும் தியானம்தான்.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவரின் வார்த்தை ஜாலத்தை... முக்கியமாக இந்தக் கதையின் பாத்திரப் படைப்பு பற்றி சொல்லியே ஆகவும்... கதையின் நாயகி சுமையாவின் பெயரை தலைப்பாக வைத்...
” சுமையா “ – கனவுப் பிரியன் [ சிறுகதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் . ரொம்பச் சின்ன வயதில் திரும்ப … பம்ருதி … திரும்ப வாசித்தவைகளில் பிரதானமானது சிந்துபாத் கதைகள்தான் . அதிலும் குறிப்பாக அவற்றில் வரும் “ பறக்கும் மாயக் கம்பளம் “ மனதில் திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கும் . அப்படி ஒரு மாயக் கம்பளம் கிடைத்தால் சிந்துபாத் போல நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வரலாமே என்ற சிறு பிள்ளைத் தனமான ஆசை . பறக்கும் கம்பளம் எல்லாம் கிடையாது , பறக்க வேண்டுமானால் விமானத்தில் ஏறினால்தான் முடியும் என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்னரும் அவ்வப்போது அந்தக் கம்பளம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இப்போது வரை மனதில் இருக்கத்தான் செய்கிறது . அப்படி இருந்தால் இப்போது யாரிடம் இருக்கும் என்று அவ்வப்போது மனதிற்குள் கேட்டுக் கொள்வதுண்டு . கனவுப் பிரியனின் முதல் தொகுப்பை வாசித்த போது , அவரிடம்தான் அது இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது . இப்போது அவரது இரண்டாவது தொகுப்பான சுமையாவை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் உறுதியாகி விட்டது . ஆம் …. அவரிடம்தான் உள்ளது . இல்லையென்றால் சிறுகதை என்ற வட...
Comments