கூழாங்கற்கள் புத்தகம் பற்றி தோழர் புதிய மாதவி சங்கரன்

கூழாங்கற்களுடன் ....
கனவுகள் தொலத்த இப்பொழுதில் கனவுப்பிரியனின் "கூழாங்கற்கள் "
சிறுகதை தொகுப்பு நூல் என் வாசிப்புக்காக 

வழக்கம்போல புதுப்புத்தக வாசனையைப் புரட்டிவிட்டு ஓடிக்கொண்டிருந்தேன். பயணத்தின் போது கூழாங்கற்கள்மீண்டும் என் கைகளில் . ஒவ்வொரு பக்கங்களும் வேகமாக புரண்டன. கூர்மையான பார்வையும்

எவரையும் பின்பற்றாத சுயமான நடையும் கூழாங்கற்களில் என்னை ஈர்த்தன. கனவுப்பிரியன் முகநூலில் எனக்குத் தெரிந்தவரா..?

இதுவரை அவரைப் பற்றி எதுவும் நான் வாசிக்கவில்லை என்பதும் கூடுதலாக அவர் எழுத்துகளின் மீது என் கவனத்தைக் குவித்தது என்று சொல்ல வேண்டும்.



சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்படும்
ஒவ்வொரு விமர்சகரின் இலட்சுமண கோடுகளையும் படைப்பாளர்கள் கடந்து தான் செல்கிறார்கள். கனவுப்பிரியன் உள்பட.


பத்தி (coloum) எழுதும் நடையில் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.


எல்லா கதைகளிலும் படைப்பாளனின் முகமும் நடமாடும் ஓசையும் இருக்கிறது. அதனாலேயே ஒட்டுமொத்தமாக ஒரு புலம்பெயர் மனிதனின் அனுபவங்களும் நினைவுகளுமாக கதைகளும் கதைமாந்தர்களும் இருக்கிறார்கள். ஒரு சில கதைகளில் ஒரே கருத்து மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.


பலவேசமுத்து, வடிவு, ரஃபிக், சமீமா, ....என்ற கதாபாத்திரங்கள்
அனைவரும் எழுத்தாளருக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் ரத்தமும் சதையுமாய் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜமனிதர்கள்.


வாழ்வில் இருண்ட பக்கங்களை பக்கம் பக்கமாக விவரிக்கும்
எழுத்துகளுக்கு நடுவில் சூரிய ஒளியில் தண்ணீருக்கு அடியில்
வெளிச்சக்கதிர்களை பிரதிபலிக்கின்றன கனவுப்பிரியனின்
கூழாங்கற்கள்.


புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டாலும் கூட
தற்போது முழுமையான விமர்சனத்திற்கான நேரம் 
வாய்ப்பது அரிது என்பதால் இந்த அறிமுகம்..


புதிய மாதவி சங்கரன் 





Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்