Posts

Showing posts from 2016

கூழாங்கற்கள் - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் பார்வையில்

Image
உப்புக்காற்றும்  ‘ அழகான ”  தண்டனைகளும் கனவுப்ரியன்: நடைப்புழுதியில் கால்கள் இருக்க விரும்பும் மனதின் கதைகள்                                                                  சு ப்ரபாரதிமணியன் இன்றைய முகநூல் எழுத்தாளர்களின் ஆதர்சமாக சுஜாதா இருக்கிறார். அவரின் வேகம் எடுக்கும் எடுத்துரைப்பு மொழியும் வார்த்தைகளின் குறுக்கலும் இன்றைய இளைஞர்களின் உரைநடைக்கும் மனோபாவத்திற்கும் ஏதுவாக இருக்கிறது. சொல்வதை அடுத்த நொடியில் சொல்லிப்போ என்ற தவக்களப்பாய்ச்சல்  வேகம்,  நடை மனபரபரப்பு இன்றைய வெகுஜன தளத்தில் இயங்கும் இளைஞர்களிடம் காணலாம் .   இந்தப்பரபரப்பையும் வேகத்தையும் கனவுப்ரியனிடன் காணலாம்.முகநூல்களில் அதிகம் எழுதியவை அப்படியே நின்று போகாமல...

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்

Image
திரு.வா.மு. கோமு அவர்களின் பார்வையில் " கூழாங்கற்கள் " புத்தகம். முற்றிலும் புதிய களன்களில் சிறுகதைகளை வாசித்தது மொழிபெயர்ப்புகள் வாயிலாகத்தான். கொஞ்சமாய் பெயர்ப்பு சரியில்லையெனில் அப்படியும் சிரமப்பட்டேனும் வாசித்து முடித்து விடுவேன். புலம்பெயர் ஆக்களின் புத்தகங்கள் கொஞ்சம் சோகம் நிரம்பிய வாழ்க்கைப் பதிவுகளாகவே வாசிக்க முடிந்தது. போக புலம்பெயர் ஆக்களின் புத்தகங்களை ஆறாவடு வாசித்த பிறகு நிப்பாட்டிக் கொண்டேன். கடலில் கள்ளத்தோணியில் செல்கையில் வாந்தியெடுத்தார்கள் அவர்கள் நாட் டை விட்டு வெளிக்கிடும்போது. சும்மாவே எனக்கு வாந்தி வந்துவிடும் போல தான் இருந்தது. முன்பாக ( 6 வருடம்) தமிழில் முதல் அரவாணியின் எழுத்து , வாழ்க்கை , நாவல் என்று வரிசையாக வரத்துவங்கிய சமயம் ஒரே புத்தகம் மட்டுமே வாங்கி வாசித்து நிப்பாட்டிக் கொண்டேன். (ஒன்றையே திரும்பச் சொல்லல்!) கனவுப்பிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்கு மதியம் இரண்டு மணிக்குத்தான் கைக்கு கிட்டியது. கி.ரா-வின் சின்னக் குறிப்பு பின் அட்டையில் இருக்க கிராமியத்தகவல் களஞ்சியமாக இருக்கப்போகிறதென்ற ஆர்வத்தில் முதல் கதையில் நுழைந்தேன். (...

கூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்

Image
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருது பெற்ற  என் ஆசான்களில் ஒருவரான   எழுத்தாளர் உதய சங்கர் அவ ர்களுக்கு நன்றி தமிழுக்கு நல்வாய்ப்பு! மத்திய தரவர்க்கத்து மன அவசங்களையே நுணுக்கி நுணுக்கி எழுதிக்கொண்டிருந்த கடந்த காலகட்டத்திலிருந்து புதிய அலைகளுடன் இதுவரை கண்டிராத புதிய பிரதேசங்களுடன் , புதிய மனிதர்களுடன் , மாறிவரும் புதிய மனநிலைகளுடன் புதிய எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். கனவுப்பிரியனின் கூழாங்கற்கள் கதைத்தொகுப்பும் அப்படி ஒரு புத்தம் புதிய கதைக்களத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதுவும் சர்வதேச கதைக்களம். அதிகம் பேசப்படாத அரபிக்களம். பாகிஸ்தானிகள் வருகிறார்கள். பிலிப்பைனி பெண் வருகிறாள். பெல்ஜியம் நாட்டுப்பெண் வருகிறாள். அரபிப்பெண்கள் வருகிறார்கள். பாலஸ்தீனி நாட்டுக்காரர் வருகிறார். இப்படியொரு சர்வதேச கதைக்களன் தமிழுக்குப் புத்தம் புதிது. முதலில் இதற்காகவே கனவுப்பிரியனை வாழ்த்துவோம். கூழாங்கற்கள் கதைகளின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய கதைசொல்லி கிடைத்திருக்கிறார். கனவுப்பிரியனின் கதைக்களத...

கூழாங்கற்கள் - எழுத்தாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து

Image
கே . எஸ் . இராதாகிருஷ்ணன் - கதை சொல்லி இணை ஆசிரியர், திமுக செய்தித் தொடர்பாளர், உயர் நீதி மன்ற வழக்கறிஞர் அவர்களின் வாழ்த்து  எங்களின் தெற்குச் சீமை நாற்றாங்காலில் துளிர்விட்டுள்ள , அன்புக்குரிய கனவுப்பிரியனின் படைப்புகள் யாவும் கவனத்தை ஈர்க்க்க்கூடியது . ஒரு படைப்பாளி இயற்கை , சமுதாயம் , மக்கள் பிரச்சனைகளின் மீது அக்கறையும் ஆர்வமும் இருந்தால்தான் தன்னுடைய ஆக்கப்பணிகளில் வெற்றி பெறமுடியும் . கனவுப்பிரியன் அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர் . பாரதியை ஆதர்சனப் புருசனாக்க் கொண்டு , தன் பணிகளை இலக்கிய உலகிற்கு ஆற்றி வருகின்றார் .  முத்துக்குளிக்கும் தூத்துக்குடி நகரில் பிறந்து , சாதாரண நடுத்தர மக்களோடு பழகி , அவர்களுடைய பாடுகள் , நிலைமைகளைக் கொண்டு தன்னுடைய படைப்புகளை மக்களிடமிருந்தே உருவாக்கி இருக்கின்றார் . குறிப்பாகத் தூத்துக்குடி , நெல்லை , தூத்துக்குடி , காயல்பட்டிண இஸ்லாமிய சகோதர்ர்களின் வாழ்க்கைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்து , ஆழமாகச் சிந்தித்து , சமுதாய அவலங்களையும் நிகழ்வுகளையும் தன் படைப்புத்திறனில் உருவாக்கிய...