கூழாங்கற்கள் - நினைவுகள்


எந்நன்றி கொன்றோர்க்கும் லெக் பீஸ் உடன் சிக்கன் பிரியாணி உண்டாம் வாட்டர் பாக்கெட் கூட கிடையாது செய்நன்றி கொன்ற மகற்கு-ன்னு கிரேக்க புலவன் யுவாங் சுவாங் கூறி இருப்பதால் “ நன்றி “ நவில்தல் செய்ய வந்திருக்கேன்.
ஒரு வருஷம் ஆக போகுது “ கூழாங்கற்கள் “ சிறுகதைத் தொகுப்பு வெளி வந்து.
என்னுடைய முதல் புத்தகம், அதுவுமில்லாமல் நான் வெளிநாட்டில் வேறு இருக்கிறேன். இருந்தும் பலருக்கும் புத்தகம் அனுப்பி அதை பேச்சுப் பொருள் ஆக்கிய திரு.ரத்னவேல் ஐயா முதல் பலருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.
எல்லாவற்றிக்கும் ஆணி வேர் திரு.N.Rathna Vel ஐயா அவர்கள் தான். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
புத்தகம் போடலாம் என ஊந்துதல் தந்த கார்த்திக் புகழேந்திக்கு நன்றி.
புத்தகம் சிறப்பாக வர காரணமாக இருந்த ஓவியா பதிப்பகம் வதிலைபிரபா அவர்களுக்கும் அவர்கள் நட்பு கிடைக்க காரணமான கவிஞர் Valangaiman Noordeen அவர்களுக்கும் நன்றி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மூலமாக திருநெல்வேலியில் சிறப்பாக புத்தக வெளியீடு நடத்திய திரு.R Narumpu Nathan அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
அன்றைய நிகழ்வில் பேசிய எழுத்தாளர் Arshiya Syed Hussain Basha , கவிஞர் கிருஷி, கவிஞர் சுப்ரா வே சுப்ரமணியன், எழுத்தாளர் M M Deen , எழுத்தாளர் தீபா நாகராணி , எழுத்தாளர் மருத்துவர் Ramanujam Govindan , முனைவர் சௌந்தர மகாதேவன் ஆகியோருக்கு அன்பும் நன்றியும்.
அன்றைய நிகழ்விற்கு பல இடங்களில் இருந்தும் வந்திருந்த முகநூல் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.
படிக்கலாம் வாங்க மற்றும் புது புத்தகம் பகுதிகளில் கூழாங்கற்கள் புத்தகம் பற்றிய செய்திகள் பகிர்ந்த ஜன்னல், தினமலர், தினத்தந்தி, தமிழ் ஹிந்து, சக்தி மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு கொண்டு சென்று சேர்த்த அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி,.
வெளிச்சம் தொலைக்காட்சியில் நூல் நயம் பகுதியில் புத்தக அறிமுகம் செய்து பேசிய எழுத்தாளர் Karan Karki அவர்களுக்கு அன்பும் நன்றியும்.
மதுரை வானொலி நிலையத்தின் புத்தகம் அறிமுகம் நிகழ்ச்சிக்கு கூழாங்கற்கள் பற்றி எழுதி அனுப்பி ஒலிபரப்ப காரணமாக இருந்த நண்பர் திரு.Palani Kumar க்கு அன்பும் நன்றியும்.
அபுதாபியில் புத்தக வெளியீட்டை நடத்திய அய்மான் சங்கத்திற்கு குறிப்பாக Hameed Sac அண்ணன் மற்றும் தமிழ் சங்க தலைவர் ரெஜினால்ட் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
புத்தகம் பற்றிய விமர்சன கூட்டம் நடத்திய புதுக்கோட்டை வீதி இலக்கிய அமைப்பு மற்றும் கோவை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி -73 ஆகிய அமைப்பின் நிர்வாகிகளுக்கு அன்பும் நன்றியும்.
புத்தகம் பற்றிய வீடியோ தொகுப்பு வெளியிட்ட முன்னாள் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் Rafeeq Sulaiman பாய் மற்றும் அவர்களின் மகள் ஆயிஷா அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.
இது மட்டுமல்லாமல் முகநூலிலும் பிளாக்கிலும் புத்தக விமர்சனமும் வாசிப்பு அனுபவங்களையும் எழுதிய கீழே குறிப்பிட்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் அன்பும் நன்றியும்.
1. எழுத்தாளர் திவான் 
2.
எழுத்தாளர் சிவசு 
3.
எழுத்தாளர் வாமு கோமு 
4.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் 
5.
எழுத்தாளர் உதய சங்கர் 
6.
எழுத்தாளர் மாதவன் ஸ்ரீரங்கம் 
7.
கவிஞர் தணிகை 
8.
கவிஞர் அகிலா புகழ் 
 9.
கவிஞர் மீ ரா செல்வகுமார் 
10.
திருமதி.தமிழ்செல்வி 
11.
திரு.கூராஅம்மாசையப்பன் 
12.
திருமதி.புவனா கணேசன் 
13.
திரு.அருள்குமார் 
14.
திருமதி.அனிதா ராம்நாத் 
15.
திரு.உமாகாந்த் தமிழ் குமரன் 
16.
திருமதி.கமலி பன்னீர் செல்வம் 
17.
திருமதி.கல்பனா ரத்தன் 
18.
திருமதி.கீதா குணாளன் 
19.
திரு.காஞ்சி சதாசிவம் 
20.
திருமதி.கீதா மதி 
21.
திரு.சத்யா sp 
22.
திருமதி.சரஸ்வதி காயத்ரி 
23.
திரு.சின்ன தாதா 
24.
திரு.சுந்தர பாண்டியன் ராஜமாணிக்கம் 
25.
திருமதி.சுஜாதா சுஜாதா 
26.
திரு.சொ.சிற்றரசன் சொக்கலிங்கம் 
27.
திரு.ஜார்ஜ் 
28.
திருமதி.தேவதா தமிழ் 
29.
திரு.மந்திரமூர்த்தி அழகு 
30.
திரு.பரிமேல் அழகர் பரி 
31.
திருமதி.புதியமாதவி சங்கரன் 
32.
திரு.பத்மஸ்ரீ விஜயகுமார் 
33.
திரு.மாடக்குளம் தனசேகரன் 
34.
திரு.ராஜசேகர் 
35.
திருமதி.லதா அருணாசலம் 
36.
திருமதி.தஸ்லீமா 
37.
திரு.வஹாப் கரீம் 
38.
திருமதி.வித்யா குருமூர்த்தி 
39.
திரு.வேல்முருகன்
40.
திருமதி.ஜெயதேவி 
41.
திருமதி.ஜோதி கார்த்திக் 
42.
திருமதி.ஸ்ரீமதி பிரசன்னா 
43.
திரு.ஹாரிஸ் கணபதி 
44.
திரு.நித்யா 
45.
திருமதி.தங்கம் வள்ளிநாயகம் 
46.
திரு.கில்லர்ஜி 
47.
திருமதி.ஜெபலீலா 
48.
திரு.சக்தி RS 
49.
ஸ்ரீவில்லிபுத்தூர் போஸ்ட் ஆபிஸ் ராஜி   
50. விமர்சனத்தை ஏழெட்டு பக்கம் கையால் எழுதி அனுப்பிய ஸ்ரீவில்லிபுத்தூர் மினரா.
ஒரு சிலர் விடுபட்டு இருக்கலாம் மன்னிக்கவும்.
மற்றும்கோபால் பல் பொடி விளம்பரம் போல ஆஸ்திரேலியாஜெர்மனிஅமேரிக்காமலேசியா,,சிங்கப்பூர்துபாய்இலங்கை மற்றும் அனைத்து இடங்களுக்கும் குறைந்த செலவில் புத்தகம் எந்த வித கேடும் இன்றி அனுப்பி வைத்த ஸ்ரீவில்லிபுத்தூர் அஞ்சல் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
எங்கோ வெளிநாட்டில் இருக்கும் எனக்கு முதல் புத்தகத்தில் இத்தனையும் சாத்தியமாக்கி தந்த வல்ல இறைவனுக்கு நன்றி.
இவை அனைத்தும் ஆதாரமாகவே என்னிடம் உள்ளதால் நீங்கள் பகிர்ந்த உங்கள் வாசிப்பு அனுபவங்களை நீண்ட நாட்களாக உறங்கிக் கிடக்கும் என்னுடைய பிளாக்கில் பதியலாம் என எண்ணியுள்ளேன்.


அன்பும் நன்றியும்.
இப்படிக்கு எல்கிய பெட்டிக்கடை யாவாரி






Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்