கூழாங்கற்கள் - எழுத்தாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் - கதை சொல்லி இணை ஆசிரியர், திமுக செய்தித் தொடர்பாளர், உயர் நீதி மன்ற வழக்கறிஞர் அவர்களின் வாழ்த்து 


எங்களின் தெற்குச் சீமை நாற்றாங்காலில் துளிர்விட்டுள்ள, அன்புக்குரிய கனவுப்பிரியனின் படைப்புகள் யாவும் கவனத்தை ஈர்க்க்க்கூடியது. ஒரு படைப்பாளி இயற்கை, சமுதாயம், மக்கள் பிரச்சனைகளின் மீது அக்கறையும் ஆர்வமும் இருந்தால்தான் தன்னுடைய ஆக்கப்பணிகளில் வெற்றி பெறமுடியும்.
கனவுப்பிரியன் அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர். பாரதியை ஆதர்சனப் புருசனாக்க் கொண்டு, தன் பணிகளை இலக்கிய உலகிற்கு ஆற்றி வருகின்றார்முத்துக்குளிக்கும் தூத்துக்குடி நகரில் பிறந்து, சாதாரண நடுத்தர மக்களோடு பழகி, அவர்களுடைய பாடுகள், நிலைமைகளைக் கொண்டு தன்னுடைய படைப்புகளை மக்களிடமிருந்தே உருவாக்கி இருக்கின்றார்.
குறிப்பாகத் தூத்துக்குடி, நெல்லை, தூத்துக்குடி, காயல்பட்டிண இஸ்லாமிய சகோதர்ர்களின் வாழ்க்கைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, ஆழமாகச் சிந்தித்து, சமுதாய அவலங்களையும் நிகழ்வுகளையும் தன் படைப்புத்திறனில் உருவாக்கியிருக்கின்றார். தூத்துக்குடி தெருக்களில் இளம்வயதில் அலைந்தபோது கண்ட காட்சிகள், அவ்வட்டாரத்தில் பயணிக்கும்போது அவரை ஈர்த்த செய்திகளும் நிகழ்வுகளின் பாதிப்புகளே அவரது படைப்புகள்.
வளைகுடாநாடு சார்ஜாவுக்குச் சென்றவுடன் நான்கைந்து மணிநேரம் மருத்துவமனைப் பணியில் இருந்துவிட்டு, ஓய்வுநேரங்களில் அறையிலிருக்கும்போதுதான் தன்னுடைய மடிக்கணினி மூலமாகத் தன்னுடைய கதைகளை உருவாக்கியிருக்கிறார் இந்த ஏகலைவன்.
வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறைகளையும், அவர்களது மகிழ்ச்சியான விசயங்களையும் கதைகளாகப் படைத்துள்ளார். கரிசல் இலக்கியத்தில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராவினுடைய கரிசல்காட்டுக்கடிதாசிகளையும், கதைகளையும் படித்து தன் கதையம்சத்தை உருவாக்கியவர். கிராவைத் தன் பிதாமகனாக நேசிப்பவர்.
எங்கள் நெல்லைச்சீமை தாமிரபரணித் தண்ணீரைக் குடித்தவர்களுக்கும், கரிசல் மண்ணின் சவருத் தண்ணீர் குடித்தவர்களுக்கும் இலக்கியம் தண்ணிபட்ட பாடு. தமிழகத்தில் எந்த மாவட்ட்த்துக்கும், எந்த வட்டாரத்துக்கும் இல்லாத பெருமை எங்களுக்கு உண்டு.
சாகித்ய அகாதமி விருதுகளை அதிகமாகத் தட்டிச் சென்றவர்களே நாங்கள் தான். ரா.பி.சேதுப்பிள்ளை.சீனிவாச ராகவன்,  பி. ஸ்ரீ ஆச்சார்யா  தொ. மு. சிதம்பர ரகுநாதன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வள்ளிக்கண்ணன், தி..சிவசங்கரன், தோப்பில் முகம்மது மீரான், பூமணி,  சு. சமுத்திரம், ஜோ டி  குருஸ், ருத்ர துளசிதாஸ் இன்னும் சொல்லப்போனால் கரிசல் இலக்கியத்தை கொண்டாடும் மேலாண்மை பொன்னுச்சாமி என

இந்தியாவிலே எங்கும் தென்படாத அளவில் தெற்குச் சீமையில் இராஜவல்லிபுரம் கிராமத்தில் ராபி.சேதுப்பிள்ளையும் வள்ளிக்கண்ணனும் என இரண்டு பெருமக்கள் படைப்புக்காண விருதுகளை அள்ளிக்கொண்டது போல, குக்கிராமமான இடைச்செவலில் கு.அழகிரிசாமியும், அவரது தோழர் கி.ராஜநாராயணனும் சாகித்ய விருதினைப் பெற்றது எந்த மாவட்டத்துக்காவது, எந்த மாநிலத்துக்காவது உண்டாதிரிகூடராசப்பக்கவிராயர், வீரமாமுனிவர், ராபர்ட் கார்டுவெல், ஜி.யு.போப்.. .வே.சு.ஐயர், ரெய்னீஸ் ஐயர், உமறுப்புலவர், சுப்பிரமணிய சிவா, காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார், ரசிகமணி.டி.கே.சி., .மாதவைய்யா, காசுப்பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதி, பெ.நா.அப்புசாமி, வெள்ளேகால் சுப்பிரமணிய முதலியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, .மு.சுப்பிரமணியம்பிள்ளை, பண்டிதமணி. ஜெகவீரபாண்டியனார், திரிகூட சுந்தரம் பிள்ளை, டி.எஸ்.சொக்கலிங்கம், .என்.சிவராமன், கி. பட்சிராஜன், .சி.பால்நாடார், தேவநேய பாவணார், பாஸ்கரத் தொண்டைமான்.வே.சுப்பிரமணியம், பா.ரா.சுப்பிரமணியம், எச்..கிருஷ்ணபிள்ளை,  என்று சொல்லிக்கொண்டே போகின்ற நீண்ட பட்டியலான தமிழறிஞர்கள்
சுயம்புலிங்கம், சூரங்குடி முத்தானந்தம், தேவதேவன், தேவதச்சன், சமயவேல், கிருஷி, நாறும்பூநாதன்,
கலைகளின் வேர்களாகத் திகழ்ந்த ஆபிரஹாம் பண்டிதர், எஸ்.ஜி,கிட்டப்பா, விஸ்வநாத தாஸ், காருக்குறிச்சி அருணாச்சலம் என இலக்கியம் கலைகளைகளை வென்றெடுத்த எங்களுடைய நிமிரவைக்கும் நெல்லைக்கு ஈடாக எந்தமண்ணும் கிடையாது. இது எங்கள் பெருமையும் செருக்கும் .

அதுமட்டுமா தினத்தந்தியைத் துவக்கிய சி.பா.ஆதித்தனார், தினமணி ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம், ஏன்.என்.சிவராமன், தினகரனைத் துவக்கிய கே.பி.கந்தசாமி, தினமலர் நிறுவனர் டி.வி.ராம்சுப்பையர், பிரபல பத்திரிகைகளில் ஆசிரியர்களாகத் திகழ்ந்த, திகழும் தினமலர் கிருஷ்ணமூர்த்தி, தினத்தந்தி சிவந்தி ஆதித்தனார், மாலன், தினமணி வைத்தியநாதன், சுதாங்கன் என எழுத்து, இதழியல் கலை, திரைப்படத்துறை
எங்கள் மண்ணின் எழுத்தாளர்கள் எப்படி மருத்துவத்துறையில் தனித்தனியாகச் சிறப்பு மருத்துவர்கள் இருப்பதைப்போல விவசாயிகளின் பாடுகளைச் சொல்லுவார்கள்; அல்லப்படும் தொழிலாளர்களின் கவலைகளைச் சொல்வார்கள்; கடலோரத்து மீனவச் சகோதரர்களுடைய கடும் உழைப்பைச் சுட்டிக்காட்டுவார்கள்நாட்டுப்புறவியல் எழுத்துக்கு எங்கள் கழனியூரானுடைய படைப்புகளே சாட்சியங்கள்; தலித்துமக்களின் இலக்கியங்களைப் பறைசாட்சும் பூமணி; மேற்கே பொதியமலையின் தென்றலையும், குற்றாலச் சாரலையும் சொல்கின்ற படைப்புகள், திறனாய்வில் சிறப்புபெற்ற தி..சியின் எழுத்துகள்; தமிழர் பகுத்த ஐவகை நிலங்களின் வாழ்வியலை இலக்கியப் படைப்புகளாகக் கொண்டுவந்தவர்கள் எங்கள் நெல்லை மண்ணின் படைப்பாளிகள்.
இன்றைக்கு அந்த வகையில் தாமிரபரணித் தீராவாசத்தில் மழையடித்த்தும், நெல்மணிகளைப் பாவி, நாற்றாங்காலுக்கு நாள் குறிப்பதுபோல புதுப்புதுப் படைப்பாளிகள் தன்னகத் திறமைகளோடு புதுவரவாக வந்தவண்ணம் இருக்கின்றனர். அந்தவரிசையில், மாதவராஜ், சங்கரங்கோவில் செவக்காட்டு மண்ணைச் சொல்கின்ற கலப்பை ராமசாமி
என்றைக்கும் சாகித்ய அகாடமி விருதுபெறுவதில் நெல்லைமண் முதலிடத்தில்தான் இருக்கும். அதற்குத்தான் கனவுப்பிரியன் போன்ற இளம்படைப்பாளிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அவர் பணி சிறக்க வாழ்த்துகள்.
                                                -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
                                                            29-10-2015.

             

Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்