கூழாங்கற்கள் - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் பார்வையில்
உப்புக்காற்றும் ‘ அழகான ” தண்டனைகளும் கனவுப்ரியன்: நடைப்புழுதியில் கால்கள் இருக்க விரும்பும் மனதின் கதைகள் சு ப்ரபாரதிமணியன் இன்றைய முகநூல் எழுத்தாளர்களின் ஆதர்சமாக சுஜாதா இருக்கிறார். அவரின் வேகம் எடுக்கும் எடுத்துரைப்பு மொழியும் வார்த்தைகளின் குறுக்கலும் இன்றைய இளைஞர்களின் உரைநடைக்கும் மனோபாவத்திற்கும் ஏதுவாக இருக்கிறது. சொல்வதை அடுத்த நொடியில் சொல்லிப்போ என்ற தவக்களப்பாய்ச்சல் வேகம், நடை மனபரபரப்பு இன்றைய வெகுஜன தளத்தில் இயங்கும் இளைஞர்களிடம் காணலாம் . இந்தப்பரபரப்பையும் வேகத்தையும் கனவுப்ரியனிடன் காணலாம்.முகநூல்களில் அதிகம் எழுதியவை அப்படியே நின்று போகாமல...