கூழாங்கற்கள் - நினைவுகள்
எந்நன்றி கொன்றோர்க்கும் லெக் பீஸ் உடன் சிக்கன் பிரியாணி உண்டாம் வாட்டர் பாக்கெட் கூட கிடையாது செய்நன்றி கொன்ற மகற்கு-ன்னு கிரேக்க புலவன் யுவாங் சுவாங் கூறி இருப்பதால் “ நன்றி “ நவில்தல் செய்ய வந்திருக்கேன். ஒரு வருஷம் ஆக போகுது “ கூழாங்கற்கள் “ சிறுகதைத் தொகுப்பு வெளி வந்து. என்னுடைய முதல் புத்தகம் , அதுவுமில்லாமல் நான் வெளிநாட்டில் வேறு இருக்கிறேன். இருந்தும் பலருக்கும் புத்தகம் அனுப்பி அதை பேச்சுப் பொருள் ஆக்கிய திரு.ரத்னவேல் ஐயா முதல் பலருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். எல்லாவற்றிக்கும் ஆணி வேர் திரு. N.Rathna Vel ஐயா அவர்கள் தான். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. புத்தகம் போடலாம் என ஊந்துதல் தந்த கார்த்திக் புகழேந்தி க்கு நன்றி. புத்தகம் சிறப்பாக வர காரணமாக இருந்த ஓவியா பதிப்பகம் வதிலைபிரபா அவர்களுக்கும் அவர்கள் நட்பு கிடைக்க காரணமான கவிஞர் Valangaiman Noordeen அவர்களுக்கும் நன்றி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மூலமாக திருநெல்வேலியில் சிறப்பாக புத்தக வெளியீடு நடத்திய திரு. R Narumpu Nathan அண்ணன் அவர்...
Comments