சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்
கதை
1 - சுமையா :
கதையோட
ஒன்லைன் பார்த்தால் சாதாரணம். 27 வயது திருமனம் ஆகாத
சுமையா அவள் சித்தி ஆயிஷா சுமையாவின் தங்கைக்கு வந்திருக்கும் வரன் என ஒரு போட்டோ
காட்டுகிறாள்.... பின் சில சம்பாசனைகளில் சுமையா தானும் ஏன் மனம் செய்துக்கொள்ள
கூடாது என எண்ணம் உருவாக... சுமையாவை ஆயிஷா சம்மதிக்க வைக்கிறார்.
இதில்
வழக்கம்போல கடைசிவரிகளில் சுஜாதாவின் முத்திரை சற்றே கவிதை நயத்தோடு..
இந்த
சாதாரண 11 பக்கமே உள்ள கதையில் -
ஆங்காங்கே அழகான சாரல் போல சில வரிகள்...
1. வாழ்வில் அடுத்து என்ன என்ற
கேள்விக்கு விதியிடம் மட்டும்தான் பதிலுண்டு.
2. வெளியே இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு வரும்போது அதிக அன்பு கிடைக்கும்...அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் . மீண்டும் ஊர் சென்றதும் அசை போட்டும் திருப்தி அடைய...
3. அன்பின் வடிவம்தானே காதல்... எதைக் காதலிக்கிறோம் என்பதைப் பொறுத்து அதுவும் நான் என்பதை மறக்கடிக்கச் செய்யும் தியானம்தான்....
2. வெளியே இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு வரும்போது அதிக அன்பு கிடைக்கும்...அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் . மீண்டும் ஊர் சென்றதும் அசை போட்டும் திருப்தி அடைய...
3. அன்பின் வடிவம்தானே காதல்... எதைக் காதலிக்கிறோம் என்பதைப் பொறுத்து அதுவும் நான் என்பதை மறக்கடிக்கச் செய்யும் தியானம்தான்....
இப்படி
அடுக்கிக் கொண்டே போகலாம் இவரின் வார்த்தை ஜாலத்தை...
முக்கியமாக
இந்தக் கதையின் பாத்திரப் படைப்பு பற்றி சொல்லியே ஆகவும்... கதையின் நாயகி
சுமையாவின் பெயரை தலைப்பாக வைத்திருந்தாலும் என்னைக் கவரந்தவர் ஆயிஷாதான்... 12 வயது சிறுமியாக இந்தியா வந்து, திருமணம் செய்துக் கொள்ளாமல் தோழியையே சகோதரியாக ஏற்று
வாழ்ந்து, தோழியின் குழந்தைக்கு
சுமையா என பெயர் வைத்ததிலிருந்து, அவளை தூய்மை,அறிவு, கொள்கையில் & செயலில் பிடிமானம் என வளர்த்தது, DYFIயில் ஈடுபடவைத்தது என சுமையாவை செதுக்கின சிற்பி அவள். அது
மட்டுமல்ல கனவுப் பிரியன் ஒவ்வொரு பாத்ததிரத்தைப் பற்றியும் சொல்லும் போது நம்
மனதில் அவர்கள் உருவத் தோற்றத்தை கற்பனையில் உருவாக்ககியது இவரது வெற்றியே..
எனக்கு மெஹர், சுமையா, ஆயிஷா இவர்கள் மட்டுமல்ல.. சுமையாவின் தங்கை, அப்பா அப்புறம் அந்த போட்டோ இளைஞன் எல்லோர் தோற்றமும்
மனதில் வந்தது....
மீண்டும்
சுஜாதாவுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.... இவர் கதையின் போக்கிலேயே
சியால்கோட்டின் வரலாறை தொட்டு கூடவே அங்கிருக்கும் கால்பந்து, கிரிக்கெட் பால், தோலாடை உற்பத்தியின்
சிறப்பையும் விவரித்து தான் ஒரு குட்டி சுஜாதா என வெளிப் படுத்தியிருக்கிறார்...
"சாரே ஜஹான்ஷா அச்சா"
எத்தனைமுறை கேட்டிருந்தாலும் இது புது தகவல்...
என்னைக்
கவர்ந்த இன்னொரு விசயம்.. வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததுடன் இரவு 12 மணிக்கு குளித்துவிட்டு கையில் காஃபியோடு பால்கனியில்
உட்கார்ந்து ஃபோன் பேசும் சுமையா....
தனியாக
நான் கேரளாவில் இருந்த 2 வருஷமும் தினம் வீடு
திரும்பியதும் குளித்து, நெஸ்கேஃப் கப்புடன்
பால்கனியின் கைப்பிடிகள் சுவரில்(9ஆவது மாடி) உட்கார்ந்து
மனைவியோடு பேசியது ஞாபகம் வந்தது... கனவுப்பிரியனுக்கும் இதே அனுபவமோ?...
எத்தனையோமுறை
மழையில் அனுபவித்து நனைந்தாயிற்று... அடுத்த மழைக்கு கால்பந்தை மெரினாவிற்கு
எடுத்துச் சென்று நனைய நனைய ஒருமுறை விளையாடனும்......
கதை-2 : நம்பி கோவில்
பாறைகள்:
Paranormal வகையா, mythologyயா, பேய் கதையா... இல்லை ஒருவேளை இதுவும் sci-fi கதையா என வகைப்பாடு படுத்தமுடியாத கற்பனை...
இதை விமர்சிப்பது என்பது சற்றே கடினமான வேலை.... படித்து உணர
வேண்டிய கதை..
குமார் சரவனன் என்ற இரு நன்பர்கள் ஒரு நாள் அந்த நம்ப கோவிலுக்கு
செல்கிறார்கள்.. அன்றிரவு குமாருக்கு ஏற்படும் அனுபவமே கதை....
மிகச்சிறந்த சிறிய கதையில் மொத்த வசனங்களே 6..7 தான்.
கதை ஆரம்பத்திலேயே அடர்ந்த காடு... பகலிலும் இருக்கும் இருட்டு...
சல சல வேன் ஓடும் ஓடை சத்தம்... எங்கோ கொட்டும் அருவியின் சத்தம்....செடி
கொடிகளின் அடர்த்தி... காட்டு மனம் என படிப்பவர்களை நந்தி கோவிலுக்கே கட்டி
இழுத்துச் சென்றுவிடுகிறார் கனவுப்பிரியன்...
அங்கு தரிசனத்திற்கு செல்பவர்கள் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை
சொல்லக் கேட்டு உந்துதலால் சென்ற குமாரின் அனுபவமே கதை..
யாரும் ஊகிக்க முடியாத கற்பனை எனவே அதை படித்தே அனுபவியுங்களேன்...
எனக்கு சதுரகிரி மலையில் இரவில் வெளிச்சமில்லாமல் ஏறிய உணர்வு
ஏற்பட்டது.
கதை- 3 ஆவுளியா.
ஹலோ கனவுப் பிரியன்... உங்களுக்கு
நாவல் மீது அப்படி என்ன கோபம்....? எத்தனை கதாபாத்திரங்கள்... வெவ்வேறு கதைத் தளங்கள்... செய்திகள்...
செய்திகள் .... புதிதுப் புதிதாகத் தெரிந்துக்கொள்ள செய்தி மேல் செய்திகள்...
எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் வட்டாரம்... 21 தீவுகள்... ஒரு முத்திரை நாவலாய் ஜமாய்த்திருக்கலாமே...
நல்ல கதைத்தான் என்றாலும் "மரோசரித்ரா" மாதிரி ஒவ்வொரு
வினாடியும் ரசிக்கக்கூடிய ஒரு இரண்டரை மணிநேர படத்தை 20 நிமிட short film ஆக்கின மாதிரி
இருந்தது... too bad.
இதிலும் உங்கள் முத்திரை வரிகளுக்கு குறைவில்லை.... உ-தா
1.காதலித்து தோற்றவன் போல இருக்கும் தனுஷ்கோடியின் வெள்ளை ஊதாக்
கடலும் நல்ல அழகு.....
2.வானமும் கடலும் ஆண்டவன் படம் வரைந்து பார்க்க உண்டாக்கிய டிராயிங் சீட்கள்...
3.கடல் என்பது கடவுளின் பிரமாண்ட சாட்சி...
2.வானமும் கடலும் ஆண்டவன் படம் வரைந்து பார்க்க உண்டாக்கிய டிராயிங் சீட்கள்...
3.கடல் என்பது கடவுளின் பிரமாண்ட சாட்சி...
இப்படி நிறைய...
யாரும் தொட்டிராத புது களம்.. விளையான்டிருக்கிறீர்... பலி
வாங்கலிலும் புது உத்தி..
"அரசுங்கிறது அரசியல்வாதி இல்ல அதிகாரி. என்ன வேணுமின்னாலும்
செய்யலாம்" - நச் வரிகள்...
"Bay watch" பாத்தக் கதையை உங்க வீட்டம்மாகிட்ட சொல்லிட்டீங்களா...?
என்ன எழுதினாலும் ஆதங்கம் தீரலை.... அப்பா தக்கை மாதிரி மிதக்கும்
போது அவர் மேல ஏறி படுத்துக்கிட்டு நீச்சல் கத்துக்கிற மாதிரி ஆரம்பிச்சி... பமிலா
விற்குப்பதில் ஒரு ஃபாத்திமாவை காதலிச்சு...குலசேசகரப் பட்டினம், மஞ்சள்நீர் காயல், தனுஷ்கோடி, பாம்பன் பாலம்... அப்புறம் அந்த 21 தீவுகள் என தொடர்ந்து கடைசியாக ஒரு திரில்லரான நாவலா 200 பக்கத்துக்கு அசத்தியிருக்கலாம்....
பரவாயில்லை விடுங்க .. அடுத்த முறை இந்தியா வரும்போது
தூத்துக்குடியில் தேங்கா நண்டு சமைச்சு விருந்து வைங்க( மெர்க்குரி கலக்காமத்தான்)
....தொடரும்
Comments