நெஞ்செலும்புக்கு நெருக்கமாகி -------------------------------------------------------- நாம் ஒவ்வொருவரும் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடி நேரமும் ஒரு கதையை உயிர்ப்பித்துச் செல்கின்றன. அவ்வாறாக கதைகள் காற்றுவெளியெங்கும் நீக்கமற நிறைந்து மிதந்து கிடக்கின்றன. அவைகள் காலத்துடன் கலவிகொண்டு மீண்டும் மீண்டும் கதைகளைப் பிரசவிக்கின்றன. கதைகள் வழியே உயிர்கள் ஜனிக்கின்றன , கதைகள் வழியாகவே அவ்வுயிர்கள் மரிக்கின்றன. கதைகளுக்கு நிலம் , கடல் , வனம் , வானம் என வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது. கடலின ் ஆழம் அளக்கப்பட்டதைப் போல கதையின் ஆழ அகலம் அளக்க முடியாது. கதைகளுக்கு நிகர் கதைகளே. கதைகளின் விசையால் சுழலும் இப்புவி ஓர் கதைக்கோள். கனவு பிரினின் சுமையா என்ற கதைத் தொகுப்பிலுள்ள கதைகளும் அகத்திலும் புறத்திலும் அதனதன் எல்லையற்ற தன்மையை நிரூபிக்கவே எத்தனிக்கிறது. அவைகள் திட்டம் தீட்டுகின்றன , களம் காண்கின்றன , மதி மயக்குகின்றன , மனத நேயம் புகட்டுகின்றன , வாழ்க்கையை வெல்லக் கற்றுக்கொடுக்கின்றன , தோல்வியை ஏற்க பழக்குகின்றன. என்ன காரணத்திற்காக என்று தெரியாமலேயே மனித மனங்களுக்குள் உறைந்து கிடக்கின்ற அல்லது ம...