சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்
சுமையா
கதை நூலைத் எழுத்தாளர் நாறும்பூநாதன் வழியாகப் பெற்றேன்.
நுனிப்புல்
மேய்ந்தேன்.எதிர்பாரா நிலையில் சூழல் மாறியதால் நுனிப்புல் மாறி மேய்ச்சலுக்குள்
சென்றேன்.
கனவுப்பிரியனின்
கைகளில் கோலும் தாளும் இணையராக இருப்பதனால் எழுத்துகள் எல்லோரையும் கவரும் வண்ணம்
கதைப்போக்கு உள்ளதாக அறிகிறேன்.
1.சுமையா:
ஊடகங்கள்
மூலம் நமக்குள் வன்மம் புகுத்துவது அரசியல்வாதிகள் தான் எனும் அழுத்தமான உண்மையைப்
படிக்கும் போது அரசியலின் அழுக்கைக் காட்டிச்செல்கிறது.
விவசாயி:
உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் உழவன் (விவசாயி)மெலிந்தே காணப்படுகிறான் எனும்
போது உழவர்களின் உலகத்தில் இருள் மட்டுமே கவ்விக்கொண்டுள்ளது எனும் சிந்தனை
எனக்குள் தோன்றியது.
கதைப்போக்கின்படி
திருமணம் ஒன்றை நிறைவேற்றிய கரு இருப்பதை அறிந்தேன். நிராகரிக்கிறாள் சுமையா
திருமணத்தை. ஆனால் அவளின் வாழ்க்கையில் இல்லறத்துணை வேண்டும் என்பதை ஆயிஷா மிக
அழகாக கொண்டுபோகும் கதைப்போக்கு அழகாக இருக்கிறது.
மெஹரிடம் ஆயிஷா சுமையா திருமணம்
பற்றிச் சொல்லும் போது எந்த அளவில் மெஹருக்குள் ஆனந்தம் கூத்தாடியிருக்கும் என
நினைக்கிறேன். அந்த அளவில் அழகு.
2.நம்பி
கோவில் பாறைகள்.
அச்சம், ஆசை,உணர்வுகள் கொந்தளிக்க
அவற்றை உணர்கின்ற வகையில் இந்தக் கதை இருக்கிறது. என்னுள்ளேயும் நம்பி கோவில்
பற்றிய ஓர் நிகழ்வு நடந்ததொன்று உண்டு.அதை நேரில் நாம் சந்திக்கும் வேளை இருப்பின்
பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
3.ஆவுளியா!
அடடா!
யதார்த்தம் என்பது இதுதான். நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட நெய்தல்
நிலத்தில் (கடல்) இருந்து கிடைக்கும் வருமானம் என்பது அளவிட இயலா நிலை என்பதை
நாங்கள் உணர்ந்துள்ளோம். வைகுந்தராசனின் கொள்கையும் கோட்பாடுமே நெய்தலை ஆட்சி
செய்து ஊழலைப் பெருக்கி வருமானத்தை ஈட்டி அவர் வாழ்விற்குப் பின் நெய்தலைப்
பொய்யாக்கும் பாடுதான் என்பதை நினைவில் கொண்டு வருகிறது இக்கதை.இன்னும் சொல்லப்
போனால் இக்கதை நெஞ்சைக் கனக்க வைக்கும் ஆழ் உண்மைகளைச் சொல்கின்றது எழுத்தோவியமாக.
இது நிகழ்வின் கற்பனை அல்லவா!
4.துணிக்கடைக்கார
அண்ணாச்சி.
இதில்
வரும் மனிதர்கள் இன்னமும் உளர்.ஒருவனின் உடல்வாகு என்பது அவன் வாழ்க்கைப்
போக்கில்தெரியும். சோத்துக்குத் திரியறவனுக்கும் சுகமா திரியறவனுக்கும் வேறுபாடு
(வித்தியாசம்) உடம்பைப் பாத்தாலே தெரிஞ்சிரும்போல................! தெளிவான
சிந்தனை இந்த வரி.
5.மண்ணெண்ணெய்
குடிச்சான்
நாயும்
நாயோடு படும் பாடும் தெரிகிறது.பக்கம் 138இல் நாயும் நாய்
சார்ந்த திணைதான் எனும் வரி மிக ஆழமாக உள்ளத்தில் சிந்தனையைத்தூண்டியது. திணை
எனில் ஒழுக்கம் என்கிறது தமிழ்மொழி. இதென்ன கதையில் வரும் இந்தத்திணை? அப்படி ஓர் ஓட்டம் அது.
6.பரிமளம்
பெரியமனுசி ஆயிட்டா
காதல்!
வளர்நிலை காதல்!! வளர்பருவக் காதல். ஆக காதல் என்பது அப்படிப்பட்டதாக்கும். அதைச்
சொல்லும் போது பரிமளம் பெரியமனுசி ஆயிட்டா.................!
7.தற்கொலை
பறவைகள்.
இந்தக்
கதையில் வரும் நிகழ்வுகள் உலகினில் இன்னமும் தொடர்கின்றன. அதுவும் மிக அமைதியாகவே
தொடர்கின்றன எனச் சொல்லி நாம் தப்பிக்க முடியாது. ஊடகங்களுக்கும் உலகத்திற்கும்
தெரிந்தாலும் அதை அப்படியே மிக நாசூக்காக மறைக்கும் வன்மமே உள்ளது.பாவம் என ஒற்றைச்
சொல்லில் சொல்லி நாம் அந்தக் கதையை ஒதுக்க முடியாது என நினைக்கிறேன்.
படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தூண்டுகோலாய் கதைகள்
உள்ளன. நன்றி
Comments