சுமையா புத்தகம் குறித்து எழுத்தாளர் நாறும்பூ நாதன் அவர்களின் மதிப்புரை
சுமையா - கனவுப்பிரியனின் இரண்டாவது தொகுப்பு ------------------------------------------------------------------------------ 21 கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் " எட்டாவது அதிசயம் " என்றொரு கதையை ஆக சிறந்த கதை என்று சொல்வேன். மாறுபட்ட கதைக்களம். ராணுவத்தில் கர்னல் ரேங்கில் பணியாற்றிய ஒருவரின் கதை. 21 ஆண்டுகள் பணிபுரிந்து கால் எலும்பு முறிந்து , மனைவியை இழந்து , மகளும் சண்டையிட்டு பிரிந்து போன நிலையில் , தன்னந்தனியே வாழும் அந்த மனிதருக்கும் , பூங்காவில் தினமும் உடற்பயிற்சி செய்யும ் ஒரு இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடலே இந்தக் கதை. அவர் வீட்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்து அந்த இளைஞன் இது என்ன இடம் என்று கேட்க , இமாலய உச்சியில் லடாக் பகுதியில் இருக்கும் காரகோரம் என்ற ஊர் என்று சொல்லி , அது உலகின் எட்டாவது அதிசயம் என்று அதன் கதையை விவரிக்கிறார். காரகோரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாட்டை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்தியா , இன்னொரு பக்கம் பாகிஸ்தான் , மற்றொரு பக்கம் சைனா , பிறிதொரு பக்கம் ஆப்கானிஸ்தான் என. இந்த மலையுச்சியில் ரோடு போடும்போ...