சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்
சுமையா கதை நூலைத் எழுத்தாளர் நாறும்பூநாதன் வழியாகப் பெற்றேன். நுனிப்புல் மேய்ந்தேன்.எதிர்பாரா நிலையில் சூழல் மாறியதால் நுனிப்புல் மாறி மேய்ச்சலுக்குள் சென்றேன். கனவுப்பிரியனின் கைகளில் கோலும் தாளும் இணையராக இருப்பதனால் எழுத்துகள் எல்லோரையும் கவரும் வண்ணம் கதைப்போக்கு உள்ளதாக அறிகிறேன். 1. சுமையா: ஊடகங்கள் மூலம் நமக்குள் வன்மம் புகுத்துவது அரசியல்வாதிகள் தான் எனும் அழுத்தமான உண்மையைப் படிக்கும் போது அரசியலின் அழுக்கைக் காட்டிச்செல்கிறது. விவசாயி: உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் உழவன் (விவசாயி)மெலிந்தே காணப்படுகிறான் எனும் போது உழவர்களின் உலகத்தில் இருள் மட்டுமே கவ்விக்கொண்டுள்ளது எனும் சிந்தனை எனக்குள் தோன்றியது. கதைப்போக்கின்படி திருமணம் ஒன்றை நிறைவேற்றிய கரு இருப்பதை அறிந்தேன். நிராகரிக்கிறாள் சுமையா திருமணத்தை. ஆனால் அவளின் வாழ்க்கையில் இல்லறத்துணை வேண்டும் என்பதை ஆயிஷா மிக அழகாக கொண்டுபோகும் கதைப்போக்கு அழகாக இருக்கிறது. மெஹரிடம் ஆயிஷா சுமையா திருமணம் பற்றிச் சொல்லும் போது எந்த அளவில் மெஹருக்குள் ஆனந்தம் கூத்தாடியிருக்கும் என நினைக்...