சுமையா புத்தகம் பற்றி தோழர் ராமுண்ணி பிரேம்சந்த் அவர்களின் வாசிப்பனுபவம்
கனவுப்
பிரியனின் "சுமையா" படித்து முடித்தேன். கூழாங்கற்களை கீழே வைக்காமல்
முழு இரவில் படித்து முடித்த மாதிரி இதை படிக்க இயலவில்லை.
சுமையா
முழுவதும் படித்து முடித்ததில் இருந்து மனதுக்கு கொஞ்சம் சுமையா இருக்கிறது.
அவரின் 21 கதைகளில் இம்முறை பாதிக்கு மேல் மனதை வருத்தியது.
உலகின் ஒவ்வொரு
மூலையிலும் வித விதமான துரோகம்,சண்டை, மனக் கலக்கம், எப்போதும் சந்தோஷமே
நாடும் எனக்கு இக் கதைகளை படித்த போது என் மேல் எனக்கே கோபம் வந்தது.
எதையும்
அறியாமல் யார் வருத்தமும் என்னை தாக்காமல் என் வாழ்க்கை, என்
இன்பம் என்று இருந்திருக்கிறேனே என்று.
உலகம்
சுற்றிய நான் சந்தோஷங்களை மட்டும் அனுபவித்து விட்டு விட்டேற்றி வாழ்க்கை
வாழ்ந்திருக்கிறேன்.
ப்ரியனின்
அந்த கதாபாத்திரங்கள் என் கண்களை திறந்திருக்கின்றன.
மற்றபடி
உலகின் பல நாடுகளையும் சுற்றி பார்த்த உணர்வை இந்த சிறுகதை தொகுப்பும் கொடுத்தது.
நாடுகள் என்பது மனிதர்களால் அவர்களின் நடவடிக்கைகளால் ஆனது தானே.
நன்றி
கனவுப் பிரியன்.
Comments