சுமையா புத்தகம் பற்றி தோழர் மேகலையின் வாசிப்பனுபவம்


புத்தகத்தின் முதல் கதையே புதிய ஊரை அறிமுகப்படுத்தி, அழகான நடையில்,பல புதிய தகவல்களோடு, புதிய களத்தில் சொல்லி இருப்பது இந்த எழுத்தாளன் நிச்சயம் வித்தியாசமான கதை சொல்லி தான் என்பதை உரக்கச் சொல்கிறது.
கதையில் நான் வியந்த,ரசித்த,அறிந்து கொண்டவைகளை குறிப்பிட விரும்புகிறேன்..
' நிர்வாகம் கொடுக்கும் வேலைகளை மட்டும் செய்யாமல் சுய ஆவலில் இழுத்துப் போட்டு சில வேலைகளை செய்தால் பணி உயர்வுடன் கூடிய வேலை மாற்றலும் கிடைக்கும் '
இது இன்றைய இளவட்டங்கள் கவனிக்க வேண்டியதும் பின்பற்ற வேண்டியதும்! ப்ரியனின் இந்த உயரத்தின் அனுபவ வெளிப்பாடாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
' வெளியே இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு வரும்போது அதிக அன்பு கிடைக்கும்.அதை சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்..மீண்டும் ஊர் சென்றதும் அசை போட்டுத் திருப்தி அடைய..'
குடும்ப முன்னேற்றத்திற்காக நாடு கடந்து பணிபுரியும் அனைத்து ஆண்களின் "அன்பின் ஏக்க" வார்த்தைகள் இவை.
ஒரே மாதிரியான செக்குமாட்டு வாழ்க்கையில் " எங்கேயாவது இந்தா இப்படிப் போற மாதிரி போகனும்..கொஞ்சம் எல்லாத்தையும் மறக்கனும்.." என்ற ஆயிஷாவின் விருப்பம் என் போன்ற பெண்களின் ஒட்டு மொத்தக் குரலாகவே ஒலிக்கிறது.
அறிந்துகொண்ட புதிய விஷயங்கள்...
பெஸ்தோ மொழி ( கூகுளில் தேடனும்)
செனாப் ஆறு
தியாகத் திருவுருவம் பெண் சஹாபி சுமையா
கவிஞர் இக்பால் 
இந்தியா-பாகிஸ்தான் இரண்டையும் 5 வாரங்களில் பிரித்த சிரில் ஜோன்ரட் கிளிப்
//ஊடகங்கள் மூலம் நமக்குள் வன்மம் புகுத்துவதே அரசியல்வாதிகளின் பொது குறிக்கோள்//
டிசம்பர்ல இருந்து 3 மாதங்களா தமிழ்நாட்டில் சிறப்பாக நடப்பதை ஒரே வரியில் சொல்லிவிட்டார்!
//நாடுகள் பாரபட்சமின்றி எங்கும் விவசாயி மெலிந்தே காணப்படுகிறான்// ப்ரியனின் ஆதங்கம் மிகுந்த வரி.
விளையாட்டு உணர்வையும் காதல் உணர்வையும் ஒப்பிட்ட இடம் அருமை.
" நீ அஹமதுயார்கான் மகளா?" என்ற ஒற்றைக் கேள்விக்காக ஏங்கும் ஆயிஷா உலகில் புலம் பெயர்ந்த ஒவ்வொரு தனிமனிதனின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறார்.
சென்னையில் சிறிது நேர சம்பாஷணைகளில் முடிவாக வேண்டிய திருமணம் சியால்கோட்டில் முடிவாவது 'மனித மனதின் எங்கே எந்த நொடியில் முடிவுகளை எடுக்கிறது என்ற இன்னமுமே அறிந்து கொள்ள இயலாத விசித்திரத்தை' கதை மூலமாக வெளிப்படுத்தியது க்ளாஸ்!அந்த சுவாரஸ்யமே வாழும் நாட்களை உற்சாகப்படுத்துகிறது.
இந்த முதல் கதையே இனி வரப் போகும் கதைகள் எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிட்டது.
எழுத்துலகில் உச்சங்கள் தொட அன்பின் வாழ்த்துக்கள்!Comments

Popular posts from this blog

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - எழுத்தாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து