சுமையா புத்தகம் குறித்து தோழர் ஜீவன் அபி அவர்களின் மதிப்பீடு




சுமையா 
கனவுப்பிரியன் சகோ பிரியத்தின் பரிசாக அனுப்பி வைத்த புத்தகம்..
இதில் சிறப்பாக நினைக்க ஒரு விசயம் என்னிடம் இருக்கிறது.. வாசிப்பு ஆர்வமுள்ளவர்களுக்கு நான் இந்த புத்தகத்தை பரிசளிப்பேன் என்று கூறியிருந்தார்.. 
இந்த வார்த்தைகளுக்காகவே என் தனித்த பிரியங்கள் அண்ணா..
சரி சுமையாவுக்கு வருவோம் புத்தகம் கைக்கு கிட்டியது சனிக்கிழமை இரவு தான்.. சரி இரவு வாசிக்கலாம் என சில பக்கங்கள் புரட்டினேன் கிட்டத்தட்ட 50 பக்கங்கள் போயிருக்கும்.. அதிலே 3 கதைகள் போய்விட்டன.. எனக்கா ஆச்சரியம் என்னடா இவரு இப்படி பெரிய பெரிய விசயத்தை இவ்வளவு சின்னதா அர்த்தமுள்ளதா எப்படி எழுதினாருனு..
அப்பறம் நேற்றைக்கு புத்தகத்தை தொடவே முடியல..ஆனாலும் சுமையா என்னை தொந்தரவு பண்ண விடுவனா நானு இன்னைக்கு காலையில பொள்ளாச்சி வரும் போது மழைச்சாயலோடு ஜன்னல் இருக்கை கதகதப்போடு இளையராஜா பாட்டும் சேர்ந்து கொள்ள.. சுமையா படிக்க இதை விடவுமா நல்ல சூழல் அமைந்துவிடும் எனக்கு.. கல்லூரி வரும் வரை ஒரு 11 கதைகள் படித்திருந்தேன் இடையிடையே வேலைகள் இருந்தாலும் இதோ இந்த அந்தி மாலை மழை அழகோடு சுமையாவை முழுமையாக படித்துவிட்டேன்..
மொத்தம் 21 கதைகள்.. இல்லை கனவுகள் இல்லை நிஜங்கள் இல்லை நிழல்கள் அல்லது உண்மை இல்லை பொய்.. இல்லை அழகு இல்லை இப்படி நாம் எப்படியும் வைத்துக்கொண்ட வாழ்வில் நிகழ்ந்த அ நிகழ்கின்ற அ நிகழப்போகிற நொடிகளை தன் கதைகளில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்..
ஒவ்வொரு கதையிலும் எனக்கு பிடித்ததை சொன்னால் நான் முழு புத்தகத்தையும் இங்கு சொல்ல வேண்டும்.. ஒவ்வொரு கதை குறித்தும் எனது சில வரிகளை பகிர்கிறேன்..
மீதி இருக்கும் பெரும் பகுதி சுமையாவை நீங்கள் வாசித்து கொண்டாடுவீர்களாக..

*சுமையா*
மழையில் கால்பந்து விளையாடாத ஒருவன் தான் காதல் தரும் உணர்வுகளை ஆகச்சிறந்தது என்பான்.. இந்த கவிதை வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு சித்தியும் மகளுமாய் கால்பந்து விளையாட போவதாய் சொல்லிருப்பாரு பாருங்க.. க்ளாஸ்.. 
அதுவும் சொல்லிருப்பாரு நான்ங்கிறது அழிஞ்சா காதல் வரும்.. https://www.facebook.com/images/emoji.php/v7/f6c/1/16/2764.png<3




*நம்பி கோவில் பாறைகள்*
உண்மையாவே இந்த கதையில சொல்லப்பட்ட இடங்கள் என் கண்ணில் விரிந்ததை பார்க்கறப்போவே ஆச்சரியம் தாங்கல.. அங்க ஒரு இராத்திரி வாழ்ந்தா எப்படி இருக்கும்.. நம்மலுக்கு தெரியாத நம்ம கலை சிற்பங்கள் நம்ம ஆட்கள் மறந்து போன சிறப்பு அம்சங்கள் என ஆச்சரியம் சூழ்ந்தது..
இயற்கை வர்ணனைகள் அந்த இடத்திற்கு எனை நகர்த்திக்கொண்டது..

*ஆவுளியா*
இந்த கதையில என் மனசுல நிறைஞ்சதெல்லாம் கடலும் கடல் சார்ந்த இடமும் கடல் உணவும் கடலின் மீதான காதலும் தான்.. அது போக மிக முக்கியமாக 4 பத்திகளில் தெரிவான கடல் சார் உயிரினங்கள் அழிவு கடல்பாசிகள் பவளப்பாறைகள் பவளத்திட்டுகள் தீவுகள் என ஏராளமான புள்ளிவிவரங்கள் அடக்கம்..
இந்த கதையில் பிடித்தமான வரியாக இதை சொல்வேன். *தம்பி அரசுங்கிறது அரசியல்வாதி இல்ல அதிகாரி 
 
என்ன வேணுமின்னாலும் செய்யலாம் நல்லது நடந்தா சரி*

*
நேற்றைய ஈரம்*
ரொம்பவும் அழகான எதார்த்தமான மனிதர்கள் காதல் உணர்வை அதன் வெளிப்பாட்டைத் தந்தது.

*அது வேறு ஒரு மழைக்காலம்*
என் தாத்தாவை இந்த கதையில் நான் பார்த்துக்கொண்டேன்.. https://www.facebook.com/images/emoji.php/v7/f6c/1/16/2764.png<3 தாத்தாக்கள் நம் அருட்தந்தைகள் நம் அறிவுப்பெட்டகங்கள்..
வாசித்து நெகிழ்ந்தேன்.. வாசித்து அந்த நெகிழ்வை பெறவும்..

*மார்க்கோபோலோ மர்கயா போலோ*
இந்த தலைப்பு நக்கலா இருந்தாலும் இதில ஒரு மனுசனோட இரண்டு வேறுபட்ட வாழ்க்கை முறைய ரொம்ப சிறப்பா சொல்லியிருப்பாரு.. நடைமுறை எதார்த்தம் வழியும்..

*எட்டாவது அதிசயம்*
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றை கதையில் பயணிக்கவிட்டு அதில் உள்ள கதாபாத்திரங்களை முதுமையும் இளமையுமாக வைத்து நமக்கும் எக்காலத்திற்கும் பொருந்துமாரு உணர்த்தும் திறன் ஆசிரியருக்கு உள்ளது..
சுயம் இல்லாம வாழறதுதான் இப்போ அதிசயமாகிருச்சு என்ற வரிகளே அதற்கு சாட்சி..

*ஷாஹிர்க்கா தட்டுக்கடை* 
நமக்கு உதவிய ஒவ்வொரு நல் உள்ளங்களையும் நன்றியோடு நினைத்து பார்க்க வைக்கும்..

*வியாதிகளின் மிச்சம்* 
இந்த நாட்டின் சுயநல வாடையை அதிகாரத்தை அலட்சியத்தை அவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு நாம் அமைதியாய் இருப்பதை பெரும் இயலாமையின் வெளிப்பாட்டை நம் முன்னே வைக்கிறது

*மரியா ப்ளோரென்ஷா*
ஒரு நல்ல புரிதல் கொண்ட வாழ்க்கையை மொழி கடந்த அன்பை வெளிப்படுத்தும் கதை.

*துணிக்கடைக்கார அண்ணாச்சி* 
இன்னொருவருக்காக வாழும் ஒவ்வொரு அன்புள்ளம் கொண்டோருக்கும் இந்த கதையை சமர்பிக்கலாம்..

*அன்னகாடி*
நிம்மதியான வாழ்வு குறித்து நமக்குள் கேள்வி எழுப்பும்..

*ஜெனியின் டைரிக் குறிப்புகள்*
ஜெனியை என் ஆழ் மன வெளிப்பாட்டு கதாபாத்திரமாக பார்க்கிறேன்.. பேய்கள் மீதான ஆர்வமும் திகிலும் இந்த கதையில் கவர்ந்தன..

*மண்ணெண்ண குடிச்சான்*
இந்த மண்ணெண்ண குடிச்சான் மாதிரி இருக்க ஆளுகளுக்கு தான் பெரும் புள்ளிகள் பலரோடு குட்டுகளெல்லாம் ஒளிஞ்சிருக்கு..

*கடல் குதிரை*
பெரும் வாழ்க்கை அனுபவங்கள் பகிர்கிறது.. https://www.facebook.com/images/emoji.php/v7/f6c/1/16/2764.png<3

*சூது கவ்வும்*
நிதர்சன உண்மைகளை மறைக்காமல் காட்டும்.

*நீ வந்தது விதியானால்*
ஆணின் மனக்குமுறலை பேசுகிறது

*அன்று சிந்திய ரத்தம்*
ஆகச் சிறந்த கதை.. மதத்தை அதன் தீவிரவாதத்தை தொலியுரிக்கும்..

*ரசவாதம்*
வாசிப்பின் மேன்மையை கண்ணில்லாதவரிடமிருந்து நம் போன்ற கண்ணுடையவர்களிடம் செலுத்திய விதம் அருமை..
வாசிப்பின் ரசவாதத்திற்கு பெரும் காட்சி இந்த கதை

*பரிமளம் பெரிய மனுசி ஆகிட்டா*
பெண் குழந்தையின் உணர்வையும் அதன் துல்லியத்தையும் நிரூபிக்கும் இந்த கதை..

*தற்கொலைப் பறவைகள்*
பறவைகள் குறித்த நம் பார்வையை அதில் உள்ள சிக்கலை பேசுகிறது..

முன்னமே சொன்ன மாதிரி இந்த புத்தகத்தில் காட்டியுள்ள மேற்கோள்கள் பாடல்வரிகள் புள்ளிவிவரங்கள் நாடுகள் புத்தகங்கள் திரைப்படங்கள் இயற்கை சார் வளங்கள் என ஒவ்வொன்றும் தவிர்க்க இயலாத புரிதலுக்கு பயன்படக்கூடியவை..

நான் குறைவாகவே பகிர்ந்துள்ளேன்..

இப்படி ஒரு அருமையான புத்தகத்தோடு எனை பயணிக்க செய்த கனவுப் பிரியன் அண்ணாவிற்கு என் பேரன்பும் பிரியங்களும்.. 
இன்னும் உங்கள் கனவுகள் பயணங்கள் பாதைகள் படைப்புகளாகட்டும்.. சுமையாவுடன் உங்களை பின் தொடர்வேன். https://www.facebook.com/images/emoji.php/v7/f4c/1/16/1f642.png:-) https://www.facebook.com/images/emoji.php/v7/f6c/1/16/2764.png<3
சுமையா
ஆசிரியர் - கனவுப்பிரியன் 
நூல் வனம் வெளியீடு
விலை - 160/-


Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி

கூழாங்கற்கள் - எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் பார்வையில்