சுமையா புத்தகம் குறித்து நண்பர் கதிர் அவர்களின் அறிமுகம்
சுமையா
முகநூல் மூலமா அறிமுகமான பல நண்பர்கள்
வாசிப்பு தளத்துல இருந்து முன்னேறி புத்தகங்களை வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க.
நண்பர்
“கனவுப்பிரியனுடைய” இரண்டாவது சிறுகதை தொகுப்பான “சுமையா”வை வாசிச்சேன். முதல்
வெளியீடான “கூழாங்கல்”லை விட நாளுக்கு நாள் மெருகேறிட்டே போறார். அவரோட
“உப்புக்காத்து” என்னை ரொம்ப ஈர்த்த கதை.
சொந்த ஊர்ல இருக்கவங்களை விட வெளியே 4 ஊர் பார்த்துட்டு வந்தவங்களுக்கு தான் எல்லா சபைலயும் மரியாதை
கிடைக்கும். ஏன்னா அவங்க நிறைய விஷயம் கூட தெரிஞ்சு வச்சுருப்பாங்க. அவங்க
விரும்பலனாலும் தெரிஞ்சு வச்சுகிட்டுதான் ஆகனும். அப்படி தெரிஞ்சுக்கற விஷயங்களை
அடுத்தவங்களுக்கு எப்படி கடத்தலாம்ங்கறதுக்கு ஆகசிறந்த வழியா சிறுகதை
இருக்கும்ங்கறதை ஒத்துக்க வச்சுருக்கார் எழுத்தாளர் “கனவுப் பிரியன்”.
எனக்கு முறையா ஒரு புத்தகத்தை
விமர்சிக்க தெரியாது. பழக்கமில்லை. மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்தறதுக்கு இந்த
பதிவு உதவும்னு நம்பறேன்.
நண்பர் ஒருத்தரோட குடிக்க
உட்கார்ந்துருந்தேன். அவர் என்னை விட மூத்தவர். எதிர்பாராத விதமா அவரோட
சினேகிதரும் கலந்துகிட வேண்டியாதாயிருச்சு. ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையலாம் தாண்டி
புது சினேகிதர் ஒரு மாதிரி, அழற மாதிரி செஞ்சார், ஆனா அழலை. நண்பர் பதமா கேட்கவும் சொன்னார். அவர் மனைவியை தேடி அவங்க
வேலை பார்க்கற அலுவலகத்துக்கு போயிருக்கார். அவங்க இல்லை, மதியம்
விடுப்பு. மாலை 7 மணிக்கு மேல வீட்டுக்கு அப்பப்பா
என்னாமா வேலை வாங்கறாங்கன்னுட்டே வந்துருக்காங்க. இவர் ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு
கேட்கலையாம், ஏன்னு கேட்டதுக்கு ரெண்டும் பொம்பளை
புள்ளைங்க, என்ன செய்ய சொல்றன்னார். இது நடந்து 7 வருசமாவது இருக்கும். அன்னைலருந்து எனக்கு வாழ்க்கையை பார்க்கற
பார்வையே மாறிடுச்சு. பெருசா என்னை பாதிச்ச விஷயம் அது. பல பேர்கிட்ட சொல்ல சொல்ல
அதோட பாதிப்பு குறையும்பாங்க, இதை நான் பல பேர்கிட்ட சொல்லி, எழுதி விகடன்லயே வந்துருச்சு. இப்பவும் அதை யோசிச்சா “அப்படி”
இருக்கும். அதை விட பத்து மடங்கு வலியை “நீ வந்தது விதியானால்” கொடுத்தது.
ஒவ்வொரு கதைக்குள்ளயும் அவ்வளவு
நுணுக்கமான விஷயங்கள். “சுமையா” படிக்கும்போதுதான் “ஜாரே ஜாஹான்சே அச்சா” ஏன்
தேசிய கேதம் ஆகலைங்கற விஷயமே தெரிஞ்சது. “மழையில விளையாடற கால்பந்தும் காதலும்”
என்னவொரு இரசனை. ஆனா இவரோட எழுத்து என்னுள்ள ஏற்படுத்துன முதல் தாக்கமே மீனுக்கு
நண்டுக்கும் ஏங்க வச்சதுதான், என்னம்மா இரசிச்சு எழுதறார். சமைக்கறப்ப
வர வாசனை மாதிரி எழுத்தே பசியை கிளப்புது.
“வியாதிகளின் மிச்சம்” உண்மையிலேயே
நமக்குள்ள பெரிய ஆற்றாமையை உணர வைக்குது. அது கூட பரவாயில்லை, மருத்துவம் சம்பந்தபட்டது, அவருக்கு
தெரிஞ்ச விஷயங்களை எழுதி இருக்கார்னு பார்த்தா “எட்டாவது அதிசியம்” வேற லெவல். அதுல
நடுவுல ஒரு வரி வருமே “கதையோட கதையா உங்க கதையையும் சொல்லிட்டிங்களே”ன்னு. அதான்.
அதேதான் ஒரு கதைசொல்லிக்கு தேவை. என்ன சொல்லிருக்கார்ன்னு இரண்டாவது முறை
படிக்கும் பொழுது புதுசா தென்படுற விஷயங்களோட எண்ணிக்கைதான் சுவாரசியமே, அதுல குறையே இல்லை.
ஒரு தாத்தாவும் பேரனும் ஹோம்வொர்க்
செய்யறதை வச்சு இவ்வளவு சொல்லிட முடியுமா? “அது
வேறு ஒரு மழைக்காலம்”ல மட்டும் இல்லை. ஒவ்வொரு கதையும் ஆரம்பிச்சு ஒரு பக்கம்
சுவாரசியமா படிச்சாலும் எதை பத்தின கதை, எங்கே போய்
நிக்க போகுதுன்னு யூகிக்க முடியாத இடத்துக்கு கையை பிடிச்சு கூட்டி போற வித்தை
முழுசா கைகூடிருக்கு.
“மரியா ப்ளோரென்ஷா” கதை ஆரம்பிக்கும்
போது கூட இது ஒரு காதல் கதையா இருக்கும்னு யூகிக்க முடியலை. அதே மாதிரி “நேற்றைய
ஈரம்” மாதிரி ஒரு காதல் கதைல பேசியிருக்க விஷயம் மட்டும் சும்மாவா? எவ்வளவு பெரிய அரசியலை போட்டு உடைச்சுருக்கார்.
என்னை ரொம்ப ஈர்த்தது “மார்கோபோலோ
மர்கயா போலோ” தான். எப்படி ஒரு மனுசனோட வாழ்க்கை சின்ன சின்ன வளைவுல திரும்பி
எதிர் திசைல வந்து நிக்குதுன்னு தெளிவா சொல்லிருக்கார். வெள்ளைக்காரிய பின்னாடி
வரவழைச்சவன் எல்லாத்தையும் விட்டுட்டு “ஜவ்வாது”ஆ வாழற நிலைமை. அதுவும் நண்பனோட
பார்வைல சொல்லப்பட்டுருக்க விதம் மிக அருமை.
ஒவ்வொரு கதைக்கு நடுவுலயும் கதையோட
சேர்ந்த மாதிரி பாடல் வரிகளை புகுத்தறதை ரொம்ப ரசிச்சேன். அதுவும் அந்த வரிகளே தனி
கதை சொல்லும்.
ஒரு நீண்ட புதினத்தை எழுத்தாளர்கிட்ட இருந்து விரைவில்
Comments