கூழாங்கற்கள் புத்தகம் பற்றி தோழர் வித்யா குருமூர்த்தி பார்வையில்
கனவுப் பிரியன் அவர்களின் "கூழாங்கற்கள்" சிறு கதைத் தொகுப்பு : போன மாதம் ஸ்பீட் போஸ்டில் பெற்ற 3- ஆம் நாளே புத்தகத்தை முழுவதுமாக சிட்டி ரோபோ ஸ்டைலில் சர்ர்ர்ரென அட்டை டு அட்டை படித்து முடித்தாகி விட்டது. இருந்தாலும் , இன்னும் 2 முறை அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆற அமர அனுபவித்துப் படித்தேன். ரிவியூ எழுதும் அளவெல்லாம் நான் பெரிய ஆள் இல்லை என்றாலும் , புக்கில் என்னைக் கவர்ந்த சில விஷயங்களைப் பகிர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போஸ்ட். 1. மொத்தம் 21 கதைகள். ஒவ்வொன்றும் ஒவ ்வொரு பின்னணி வைத்து எழுதப் பட்டது. கனவுப் பிரியனின் நட்பு வட்டத்தில் இருப்பதால் அவர் எழுத்து நடை பரிச்சயமான ஒன்றுதான். எனினும் , முக நூல் பதிவுகளைக் காட்டிலும் , புத்தகத்தில் முதிர்ந்த எழுத்தாண்மை மற்றும் தொய்வில்லாத நடை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. 2. என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் - கதை தொடங்குவது ஓரிடம் முடிப்பது அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வேறொரு புள்ளியில். ஆனாலும் , இந்த 2 பாயிண்ட்டுகளையும் அழகாக பேலன்ஸ் செய்து , அதை ஒரு குறையாக நமக்கு தோன்ற விடாதது சிறப்பு. 3. அடுத்த விசேஷம் - ...