கூழாங்கற்கள் புத்தகம் பற்றிய ராஜ சேகர் அவர்கள் பார்வை

 

கூழாங்கற்கள் என் பார்வையில்.......

ஐயப்பனை பொறுத்தவரை இந்த மடம் இல்லைனா சந்த மடம் 

சில தண்டனைகள் அழகான தண்டனைகளாக மாற கால அவகாசம் தேவைப்படுகிறது.

படிச்சிக் கல்யாணம் பண்ணி, பிள்ளைப் பெத்து, இழுத்துக் கிட்டு கிடந்து, சாவுறது மட்டும் தான் வாழ்க்கைனு யாரு சொன்னா?

உப்புக்காற்று அதற்கே உரித்தான பிசுபிசுப்புடன்
வீசிக்கொண்டிருந்தது, முகத்தில்.

இதோ ஒரு புதுப்பணக்காரன்
கையில் கொட்டோகொட்டு என கொட்டுகிறது என்றால் அது, நிச்சமாய் உழைத்த காசாக இருக்காது என்பது நினைவில் இருந்தால் போதும்.

வாழ்வில் சில நேரம் பெரிய அசம்பாவிதங்களை தவிர்க்க சில விபத்துகள் தேவையாய் இருக்கின்றன.

இதெல்லாம் கனவுப் பிரியன் அவர்கள் எழுதிய கூழாங்கற்கள் புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கதைகளின் முடிவுகள்.

அவர் வாழ்க்கையில் நடந்தவைகளை தொகுத்து கற்பனைபளைப் புகுத்தி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுவோடும் இந்த கூழாங்கற்களை படைத்திருக்கிறார். கதைகளுக்கு முடிவு மிகவும் முக்கியம். அதை சரியாகச் சொல்லும் போது படைப்பாளனின் வெற்றி இருக்கிறது. அதைச் சரியாக கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார் எழுத்தாளர் கனவுப் பிரியன்

திக்குவாய் பாலா, வடிவு, பலவேசமுத்து, ரபீக் , கேப்டன் செல்வராஜ், ஜூவானா , குமாரசாமி என பலவிதமான கதாபாத்திரங்கள் கதையைப் படித்தபின்பும் நீங்காமல் நினைவில் நிற்கிறது

கூழாங்கற்கள், பெட்ரூமாஸ் லைட்டே தான் வேணுமா?,ரபீக் @ஜிமெயில்.காம், உப்புக் காற்று போன்ற கதைகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டிகிறது.

அவரு அனில்கும்ளே மாதிரி என்ற கதையை படித்தவர்கள் நிச்சியமாக சிரிக்காமல்
இருக்க முடியாது. அடுத்த முறை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் இப்புத்தகத்தை படித்த யாராக இருந்தாலும் இக்கதை கண்டிப்பாக நினைவில் வந்து செல்லும்.

குறைகள் என்று சொன்னால் ஆங்காங்கே சந்திப் பிழைகள் மட்டும் காணப்படுகின்றன. மற்ற படி கதையில் குறை சொல்ல முடியாது. சிலர் கூட கட்டுரை போல இருக்கிற கதைகளைத் தவிர்த்து இத்தொகுப்பை போட்டிருக்கலாம் என்றார்கள். கதைகள் பல வகைகள். அந்த வகையில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளை அப்படி தான் பார்க்கிறேன்.

கூழாங்கற்கள் புத்தகம் என் ரயில்பயண வாழ்க்கையை எளிதாக்கியது. தினமும் ஒரு கதை தான் படித்தேன். எங்கே புத்தகத்தை அதற்குள்ளேயேயும் படித்து முடித்துவிடுவோமா என்கிற உணர்வை ஏற்படுத்தியது. கதைகள் படிப்பதும் தேநீர் குடிப்பதும் ஒன்று தான்.
அவசரமாக குடித்துவிட்டால் சுவையை அனுபவிக்க முடியாது.

கூழாங்கற்கள் புத்தகத்தை எனக்கு கிடைத்த தேநீர் கோப்பையாக கருதினேன்.

சுவை அருமை தான்.

வாழ்த்துகள் அண்ணா
உங்களின் அடுத்த படைப்பை எதிர்நோக்கும் அன்புத் தம்பி
ராஜ சேகர்

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்

கூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்