கூழாங்கற்கள் புத்தக வெளியீடு பற்றி ஜன்னல் இதழில்

ஜன்னல் -
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த சனிக்கிழமை மாலை எழுத்தாளர் கனவுப்பிரியனின் கூழாங்கற்கள்சிறுகதை நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. கரிசல்குயில்கள் திருவுடையான், கிருஷ்ணசாமி ஆகியோர்களது கிராமியப் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சியில், உமாகாந்தி ரத்னவேல் நூலை வெளியிட எழுத்தாளர் அர்ஷியா, ராபியா கனவுப்பிரியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவுக்குத் தலைமைதாங்கிய திருவுடையான் மற்றும் வெ.சுப்ரா, மருத்துவர் .ராமானுஜம் , பேராசிரியர் சவுந்தர மகாதேவன், கவிஞர் கிருஷி , எழுத்தாளர் அர்சியா, தீபா நாகராணி, வழக்கறிஞர் தீன் ஆகியோர் சிறுகதைகள் குறித்து மதிப்புரை வழங்கினர்.

விழாவில் பேசிய கவிஞர் கிருஷி, “இந்த அரங்கத்தில் எல்லா மதத்து மக்களும் எத்தனை இயல்பாக அமர்ந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தானே நம் தேசமும் நல்லிணக்கத்தோடு இருக்கிறது. அதன்மீது மதச்சாயம் பூசுகிறவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள். மனிதநேயத்தை வலியுறுத்தும் கனவுப்பிரியனின் சிறுகதைகள் அனைத்தும் அனுபவங்களால் எழுதப்பட்டிருப்பவை. அவை நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியதுஎன்றார்.

நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த த.மு.எ.க.சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத்தலைவர் நாறும்பூ நாதன் வரவேற்றுப் பேசினார். எழுத்தாளர் கனவுப்பிரியன் ஏற்புரை வழங்க, ரத்னவேல் நன்றியுரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சிவசு, வரலாற்று ஆய்வாளர். செ.திவான், ஓவியர் பொன்.வள்ளி நாயகம், ஓவியர்.கதிர், எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன், பேராசிரியர் கோமதி நாயகம், ஈஸ்வரன், வி.சண்முகம், முருகன், வரகுணன், கவிஞர் ஜெயபாலன், பரிமேலழகர், பதிப்பாளர் வதிலை பிரபா, செல்வம் ராமசாமி, எழுத்தாளர்.கார்த்திக் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Comments

Popular posts from this blog

கூழாங்கற்கள் - நினைவுகள்

கூழாங்கற்கள் - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் பார்வையில்