கூழாங்கற்கள் புத்தகம் பற்றி தோழர் வித்யா குருமூர்த்தி பார்வையில்
கனவுப் பிரியன் அவர்களின் "கூழாங்கற்கள்" சிறு
கதைத் தொகுப்பு :
போன மாதம் ஸ்பீட் போஸ்டில் பெற்ற 3-ஆம் நாளே புத்தகத்தை
முழுவதுமாக சிட்டி ரோபோ ஸ்டைலில் சர்ர்ர்ரென அட்டை டு அட்டை படித்து முடித்தாகி
விட்டது. இருந்தாலும், இன்னும்
2 முறை
அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆற அமர அனுபவித்துப் படித்தேன். ரிவியூ
எழுதும் அளவெல்லாம் நான் பெரிய ஆள் இல்லை என்றாலும், புக்கில் என்னைக்
கவர்ந்த சில விஷயங்களைப் பகிர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போஸ்ட்.
1. மொத்தம் 21 கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணி வைத்து எழுதப் பட்டது. கனவுப் பிரியனின்
நட்பு வட்டத்தில் இருப்பதால் அவர் எழுத்து நடை பரிச்சயமான ஒன்றுதான். எனினும், முக நூல் பதிவுகளைக்
காட்டிலும், புத்தகத்தில்
முதிர்ந்த எழுத்தாண்மை மற்றும் தொய்வில்லாத நடை மிகவும் ரசிக்கும் படி இருந்தது.
2. என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் -
கதை தொடங்குவது ஓரிடம் முடிப்பது அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வேறொரு
புள்ளியில். ஆனாலும், இந்த
2 பாயிண்ட்டுகளையும்
அழகாக பேலன்ஸ் செய்து, அதை
ஒரு குறையாக நமக்கு தோன்ற விடாதது சிறப்பு.
3. அடுத்த விசேஷம் -
எல்லாக் கதைகளிலும் டீடெய்ல்ஸ்..டீடெய்ல்ஸ்.. அது ஹீரோ கையாளும் மிஷின் பற்றியோ, சாப்பாடு தயார்
செய்யும் இடம்
பற்றியோ, மெடிசின்ஸ் பற்றியோ.. எல்லாவற்றிலும், விரிவாக ஆனால் எளிமையாக (elaborated yet easy to understand types) என்னைப் போன்ற சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு போரடிக்காமல் விவரித்த விதம் சூப்பர். In fact, it helps us to pay more attn to the story. Liked it like emoticon.
பற்றியோ, மெடிசின்ஸ் பற்றியோ.. எல்லாவற்றிலும், விரிவாக ஆனால் எளிமையாக (elaborated yet easy to understand types) என்னைப் போன்ற சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு போரடிக்காமல் விவரித்த விதம் சூப்பர். In fact, it helps us to pay more attn to the story. Liked it like emoticon.
4. கடைசி பாயிண்ட் : ஒரு
கதை கூட அவலச் சுவையில் இல்லாதது. Its a big relief you know.. அவலச் சுவை கொண்ட ஓரிரு
சிச்சுவேஷன்களிலும் அதை விவரித்த விதத்தில், இதுவும் கடந்து போகும்
என்ற ஒரு பாஸிடிவ் அப்ரோச் இருந்தது. Because, its an entertainment
and trust me, this book entertained me fully. நோ அழுவாச்சி அட் ஆல்.
எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகளாக, நெற்றித் தழும்பு
இனி ஒரு விதி செய்வோம்
களிமண் வீடு
குண்டு பாகிஸ்தானி
மற்றும்
அவரு அனில் கும்ப்ளே மாதிரி (இது செம்ம சூப்பர்)
ஆகியவற்றை சொல்லலாம்.
இனி ஒரு விதி செய்வோம்
களிமண் வீடு
குண்டு பாகிஸ்தானி
மற்றும்
அவரு அனில் கும்ப்ளே மாதிரி (இது செம்ம சூப்பர்)
ஆகியவற்றை சொல்லலாம்.
மொத்தத்தில, முதல் சிறுகதைத்
தொகுப்பு போல இல்ல. Total paisa vasool. Well done கனவுப் பிரியன்.
பெங்களூர்
Comments