கூழாங்கற்கள் புத்தக வாசிப்பனுபவம் பற்றி ஓவியர் கீதா குணாளன்
கூழாங்கற்கள் ..
நண்பர் திரு கனவுப் பிரியனின் படைப்பு
படிக்கும் பழக்கம் குறைந்துபோனதற்கு என் உடல் நிலை
ஒருகாரணம் என்றாலும் அதிக நேரம் ஓவியம் சார்ந்த விஷயங்களில் ஊன்றிப்போவது மற்றொரு
முக்கிய காரணம்..இவரது பதிவுகளின் ரசிகைகளுள் நானும் ஒருத்தி..ஆனால் அதிகம் படிக்க
முடியாமற்போவதற்காய் பல நேரங்களில் வருந்தியதுண்டு... இந்த புத்தகம் அவரெழுதிய
சிறுகதைத்தொகுப்பு ...இப்போது கூட முழுமையாய் இன்னும் படிக்க வில்லை ... முக்கியமாய் உடல் நிலை ஒரு காரணம் என்றாலும், பிடித்த உணவை எப்படி
நிதானமாய் சுவைத்து மகிழ்வோமோ அப்படி மெதுவாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ரசித்துப்படித்துக்கொண்டிருக்கிறேன்..முடிந்து விட்டால் ?? ஐயோ என்ன செய்வது என்று
இவரது எழுத்துக்களைப்படித்த போது அந்த இடத்திற்கு நானே
சென்று வந்ததைப்போல் உணர்ந்தேன்..வெளிநாடுகளை மனக்கண் முன் கொண்டுவரும் வித்தை
அவரெழுத்தில்...அதில் பூங்காக்குள் பொலிவுற்ற நகரத்தை என் வாழ்நாளில் ஒருமுறையாவது
பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றித்துளைக்க ஆரம்பித்திருக்கிறது..
ஆட்டின் கண்ணீரில் ஆத்மார்த்த அன்பைக்கண்டேன்.. எங்கள் அறுபதை அந்த குளிர்ச்சி நிறைந்த களிமண் வீட்டில் நடத்த எண்ணினேன், உருவு கண்டு எள்ளாமை உணர்ந்தேன் குண்டு பாகிஸ்தானியில்...சலீம் போன்ற எத்தனையோ பேர் மேல் வைத்த மேலோட்டமான தவறான எண்ணம் தவறு எனப்புரிந்து தெளிந்தேன்..உடல்நலமின்றி படுக்கையில் போதிமரம் ... இப்படி படித்தவரை விழியில் விழுந்து இதயம் நுழைந்த கதாபாத்திரங்கள்.. எனக்கு மிகவும் பிடித்துப்போனது இனி ஒரு விதி செய்வோம்..ஆனியன் தோசையின் சுவைத்தொண்டையில் நிற்க காபியின் மணம் மூக்கைத்துளைத்த படி ., இன்னும் கொஞ்சம் கொஞ்சமாய் படித்துகொண்டிருக்கிறேன்..
இன்னும் பல புத்தகங்கள் வெளிவரட்டும் ..வாழ்த்துக்கள்
நண்பரே..!
கீதா குணாளன்
ஓவியர்
Comments