கூழாங்கற்கள் பற்றி தோழர் ஜெயதேவி பாஸ்கரன்

கையில் கிடைக்கும் புத்தகத்தை அலட்ச்சியப்படுத்தாமல் வாசித்து முடிப்பதே அப்புத்தகத்துக்கும் அதை எழுதிய எழுத்தாளனுக்கும் நான் கொடுக்கும் ஆகச் சிறந்த மரியாதையாக இருக்க கூடும் என்பது என் எண்ணம்.அதிலும் ரயில் பயணத்தில் வாசித்து முடித்த " கனவுப் பிரியனின் " ் புத்தகம். கொஞ்சம் ஸ்பெஷல் .சிரமமெடுத்து அக்கறையுடன் அனுப்பிவைத்தால்.
செத்தபின் சிலைவைத்து புகழ்வது தானே நம்முடைய மரபு என்ற கசப்பான உண்மையை இயல்பாய் ஆசிரியர் தன்னுரையில் சொன்னதே புத்தகத்தின் மீதான ஆர்வத்தை இரட்டிப்பாக்கியது.ஆண் பிள்ளை அப்பாவை சிலாகித்ததும் மனதுக்கு நெருக்கமாய் போனது.
பெற்றோரின் கனவுகளை நனவாக்கப் பெரும்பாலான வீடுகளில் பலிகடாவாக்கப்படுபவர்கள் அவர்களது பிள்ளைகள் என்பதை அருமையாக எடுத்துக் காட்டியும் ஐயப்பன் போன்று சுயமாக ஏதேனும் ஒன்றை திறம்பட செய்ய தெரிந்தவர்களுக்கு உலகில் வாழ பல வழிகள் திறந்தே இருக்கும் என்பதை அருமையாக சொன்ன கதை தான் " இந்த மடம் இல்லை என்றால் சந்தை மடம் ".
இறைவன் நமக்கென்று கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.அவன் கொடுக்க மறுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்பதை அழகாய் உணர்த்திவிட்டு போனதுதான் கூலான் கற்கள் என்றால் மிகையில்லை.கான்கிறிட் காட்டுக்குள் அதுவும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் என்னை என் பால்ய காலத்துக்கே மீண்டும் ஒரு முறை அழைத்து சென்ற கதைதான் " களிமண் வீடு ". வீட்டில் கடைசி பிள்ளை எல்லாம் எடுபிடி வேலை செய்யவே பிறந்தவர்கள் என யார் சட்டம் வகுத்தது ".அதானே என்று வாசித்த போது எனக்கு நானே கேட்டுக் கொண்டேன் கடைசி பிள்ளை என்பதால்.அதே நேரம் மண்ணில் விளையாட உறவினர் வீட்டாரின் தயவை எதிர்பார்க்கும் என் மகனையும் நினைத்து பார்த்தேன்.
வெளிதோற்றதைக் கொண்டு ஆளை எடை போடதே " குண்டு பாகிஸ்தானி " யின் கதையில் திறம்பட இருந்ததும் அழகு தான். " மேடின் சைனா " எனக்கு தெரியாத பல விடயங்களை அறியத் தந்தது. ஆட்டை கொண்டாடிய வடிவு ஏன் மனிதர்களை கொண்டாட மறந்தால் என்பதை தான் யோசித்தேன் வடிவு கதையை வாசித்த போது. தான் ஆடு என்ற ஒன்றின் மீது கொண்ட ஆசை அடுத்தவர்களுக்கு இடையுறாக இருந்த போதும் பிடிவாதத்தாலும் சுயநலத்தாலும் அதை வடிவு உணர மறுத்தால் சாதித்தது ஒன்றும் இல்லை என்பதை அருமையாக உணரவைத்த கதை.
அரசியல்வாதிகளின் பின்னால் போன தொண்டர்களின் குடும்பங்களினதும் வாரிசுகளினதும் நிலை எத்தகைய பரிதாபகரமானது என்பதை வலியுடன் உணர்த்தியது " காட்சி பிழை". தொண்டனின் மரணம் தந்த இழப்பை பல லட்சங்களினால் நிரப்பிவிடுவதாக சொன்னாலும் அதன் பின் உள்ள உழல்கள் தான் எத்தனை.ஒரு அப்பாவியை கொலை செய்யும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. அடிப்படையில் அவன் நல்லவன் என்பதால் தான் சூல்னிலையால் அவன் வாழ்க்கை சின்னபின்னமானாலும் அடுத்தவருக்கு உதவி செய்து அவர்கள் வாழ்கையில் ஒளி கொடுக்க முடிகிறது.படிப்பு ,கல்யாணம்,பிள்ளை,சாவு மட்டும் தான வாழ்க்கை என்ற மிகப் பெரிய கேள்வியையும் பாதிப்படைந்தவன் மூலம் ஆசிரியர் முன் வைத்தால் இக்கதையை வாசித்து முடித்த பின்னும் வெளிவர முடியவில்லை.
புது பணக்காரன் கேட்காமலேயே லஞ்சம் கொடுப்பது கடவுளுக்கு என்பதையும் குறுக்கு வழியில் பணம் சம்பாரிக்க மேற்கொள்ளும் சூட்சமங்களை " பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா " என்ற கதையை வாசித்த போது பிரமித்து போனேன்.ஆணோ ,பெண்ணோ தனியாக பனி நிமித்தம் கடல் கடந்து போனால் நாமாகவே ஒரு முடிவுக்கு வந்து அவர்களை விமர்சனம் செய்து விடுகிறோம் என்பதை ஆணித்தரமாக சொல்லியது " மனிதரில் இத்தனை நிறங்களா ". " பணன்கொட்டை சாமியார் " ஒரே வரியில் சொல்வதானால் முதியவர்களுக்கு ஒரு வைட்டமின் கதை.
கணவன் அயல் தேசத்தில் எனும் போது மனைவி அனுபவிக்கும் துயரத்தையும் அதை உணராமல் கணவன் நொடி பொழுதான சந்தேகத்தில் இருவரின் நிம்மதியையும் குழி தோண்டி புதைத்து விடுகிறான்.அதிலும் பெற்ற பிள்ளை கொழுந்தனை அப்பா என்று அழைக்கும் போது அவள் எப்படி கூனி குறுகி விடுவாள் என்பதையெல்லாம் உணருவதே இல்லை.அதே நேரம் பணம் பல பிரச்சனைகளுக்கு வித்திடும் எனும் போது மனைவி அந்த தவறை செய்யாமல் தவிர்த்தும் இருக்கலாம். அதே நேரம் ரபிக் @ ஜிமெயில் .காம்.என்ற இக்கதையின் மூலம் நல்ல நண்பன் வாழ்வின் வரம் என்பதையும் சொல்ல மறக்கவில்லை.

என் அளவில் எளிய நடையில் எண்ணற்ற வாழ்க்கை அனுபவங்களை அழகாயும்,அர்த்தமாயும் சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்.

ஜெய தேவி பாஸ்கரன் 
இலங்கை 

Comments

Popular posts from this blog

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்