கூழாங்கற்கள் பற்றி தோழர் தேவதா தமிழ்

கூழாங்கற்கள்-கனவுப்பிரியன்
-----------------------------------------------
நான் மிகவும் நேசிக்கும் ரத்தினவேல் அப்பாவிடமிருந்து எனக்கு எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்களின் கூழாங்கற்கள் புத்தகம், வந்து 15 நாட்கள் இருக்கும் .சில காரணங்களால் அந்நூலை வாசிக்கும் காலம் இன்று தான் கிடைத்தது...
கனவுப்பிரியன் என்ற பெயருக்கு பொருத்தமான நூல் -கூழாங்கற்கள்
நான் இப்ப எந்த நாட்டில் இருக்கேன்னு தெரியல...எந்த நாட்டினரோடு இருக்கேன்னும் தெரியல..செலவின்றி உலகம் சுற்றிய உணர்வைக்கொடுத்த நூலாசிரியருக்கு மிக்க நன்றி.
அழகிய வண்ண அட்டையுடன் 21 கதைகளை ,256 பக்கங்களில் ,விலை ரூ200 ,கவிஞர் வதிலைப்பிரபா தனது ஓவியா பதிப்பகம் மூலம் தரமான தாள்களைக்கொண்டு மிகச்சிறப்பாக இந்நூலை அச்சிட்டு உள்ளார்.
முகநூல் நண்பர்கள் திருமிகு நாறும்பூ நாதன்,திருமிகு ஷாஜகான் உள்படநால்வர் 
இந்நூலுக்கு அணி செய்துள்ளனர்.
இனி கதைகளுக்கு வருவோம்.
யதார்த்தமான,நேர்மையான,சமூக அக்கறை நிறைந்த,வெளிநாட்டில் வாழும் இந்தியரின் மனதை காட்சிப்படுத்துகின்ற....
அரபு நாடுகளில் வாழும் பன்னாட்டு மனிதர்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுகின்ற கதைகளாக அனைத்தும் உள்ளதை அறிய முடிகின்றது.
1]இந்தமடம் இல்லன்னா சந்த மடம் -
கதையில் வரும் ஐயப்பன் கதாபாத்திரத்தின் திறமைகளை யாரும் கண்டுகொள்ளாததன் விளைவே நம் நாட்டுக்கலைகளை நாம் இழந்து நிற்கிறோம்...என்ற உணர்வைத்தந்தது ...இக்கதை.
2]கூழாங்கற்கள்-
இக்கதையில் உறவுகளுக்குள் திருமணம் செய்யும் ஒருவன் தனது குழந்தை திக்குவாய் பிரச்சனை இருப்பதை தீர்க்கவே ...வெளிநாட்டில் ஒரு தீவில் பணிக்குச்செல்லும் ஒருவன் படும் வேதனைகள்,நேர்மையாக இருப்பதால் வரும் பாதிப்பை,குழந்தைக்காக சேர்த்து வைத்த கூழாங்கற்களால் அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அழகாக கூறுகிறது.
3]களிமண் வீடு
சிறுவயதில் பெற்றோருடன் நாம் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் நம்குழந்தைகட்கு தந்திருக்கோமா என சிந்திக்க வைக்கும் கதையாக.....கதைமாந்தர்களுடன் நம்மையும் வாழ வைத்துள்ளார்.
4]குண்டு பாகிஸ்தானி
பாகிஸ்தானி என்றாலே எதிரி மனப்பான்மையை நம் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளோம் என்பது மறுக்கவியலா ஒன்று...சுத்தமற்ற குண்டு பாகிஸ்தானியைக்கண்டு அருவருத்து...அவர் செய்யும் செய்யும் உதவிகளை எல்லாம் சந்தேகக்கண் கொண்டே பார்த்து முடிவில் தெளிவடைவதாகக் கதையை எழுதியுள்ள பாங்கு மிக அருமை.
5]வடிவு-
இக்கதையில் வடிவை நேரில் பார்க்கும் உணர்வு...உண்டாக்கிவிடுகின்றார்...ஆசிரியர்.
ஒவ்வொரு கதையும் தனக்கென ஒரு பாணியில், ஒரு நாட்டில்,அறிவியல் செய்திகளை உள்ளடக்கியதாக,பணி செய்பவர்களின் மனநிலையைப்படம் பிடித்துக்காட்டுவதாக நேர்த்தியுடன் எழுதியுள்ளார்...வர்ணனைகள் குறைவு என்றாலும் காட்சிப்படுத்துவது இவருக்கு வசமாகியுள்ளது...
காட்சிப்பிழை -கதை மனதைத்தொடுவதாக ...உயிரோட்டத்துடன் .அமைந்துள்ளது.
உப்புக்காற்று -கதை கிராமத்து மக்களின் அன்பையும்,பாசத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.அப்பெண்களின் உணர்வுகளை அழகாக கடத்துகின்றார் நம்மிடையே..
பனங்கொட்டை சாமியார் -கதை மிக அருமையாக முதியோர் இல்லங்களை ஒளிவீசச்செய்யும் தன்மையுடையதாக அமைந்துள்ளது...
அவரு அணில்கும்ப்ளே மாதிரி-ஆஹா நல்ல நகைச்சுவை படித்து விட்டு நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்...தன்னைத்தானே கிண்டலடித்துக்கொள்ளும் வடிவேலுவைக்காண்பது போல் இருந்தது...
மொத்தத்தில் பெரும்பாலானக் கதைகள் வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் உளவியலை.சிக்கல்களை, அவர்கள் தனக்கு பிடித்த உணவைக்கூட ஒதுக்கி வைத்து சூழ்நிலைக்கைதிகளாகக் பரிணமிப்பதைக்காட்டுகின்றன...
தொடர்ந்து எழுதினால் நல்ல நாவலைப்படைக்கும் நாவலாசிரியராக கனவுப்பிரியன் ஆகக்கூடும் என்பதில் ஐயமில்லை...

மனம் நிறைந்த வாழ்த்துகள் கனவுப்பிரியன் அவர்களுக்கு.இந்நூலை அன்புடன் அனுப்பி வைத்த ரத்தினவேல் அப்பாவிற்கு மனம் நிறைந்த நன்றி..அனைவரும் படிக்க வேண்டிய நூலாக

தேவதா தமிழ் 

Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்