கூழாங்கற்கள் பற்றி தோழர் அனிதா அவர்களின் வாசிப்பனுபவம்
புத்தகத்தில் ரசித்தவை
1. எளிய நடை(.அடுத்த
வீட்டு அண்ணன் வெளியூர் போய் விட்டு வந்து தன அனுபவங்களை விலாவாரியாகச் சொன்ன
மாதிரி ஒரு உணர்வு.)
2. கதை களம் -அரபு
நாடுகளில் பண்ணியாற்றும் நம் சொந்தங்களின் சூழல், இடைஞ்சல்கள் ஏக்கங்களை
இதை விட அழகாக யாராலும் பதிவு செய்ய முடியாது.
பல இடங்களில் எனக்கு எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு
வந்தது.அவரைப் போலவே இவரும் நவீன பொறி இயல் அறிவை சுவையாகக் கையாளுகிறார். sewage
plant ,capsule endoscopy பற்றியெல்லாம் ஆர்வத்தைத் தூண்டும் விதம் எழுதுவது லேசான
காரியம் அல்ல.அதிகம் திணிக்காமல் அளவோடு கையாண்டு கதைக் களத்திற்கு வலு
சேர்க்கிறார் .மனிதர்களின் ஆழ் மன உணர்ச்சிகளை நல்ல புரிதல்களோடு எழுதுகிறார் .
அந்த விதத்தில் சந்தை மடம் கதையும் பனங்கொட்டை சாமியார்
கதையும் எனக்குப் பிடித்தது. இடையிடையே ஓடும் மெல்லிய நகைச்சுவை பல இடங்களில்
மென்மையாகப் புன்னகைக்க வைக்கிறது.
நெற்றித்தழும்பு கதையில் 'பெருசாக்காதீங்க, மன்னிச்சு விட்டுருங்க' வரும் இடம் மனம்
விட்டுச் சிரித்தேன்.கதைகளின் இறுதியில் வரும் பஞ்ச் லைன்கள் ரசிக்கும்படி
இருகின்றன.உதாரணம்- நதி நீர் இணைப்பு.மொத்தத்தில் எளிய ,அன்றாடம் பார்க்கும்
விஷயங்களைக் கருவாக எடுத்துக் கொண்டு அவற்றை சுவைபட எழுதும் வித்தை இவருக்கு
நன்றாகவே கை வருகிறது.
தொடர்ந்து எழுதுங்கள் கனவுப்பிரியன்.
எனக்குப் பிடிக்காதவை......
1. very bad proof reading பல இடங்களில்.
2.ஜைனப் அல் பாக்கர் கதையின் கடைசிப் பாரா தேவையா தம்பி? நீங்கள் குறிப்பிட்டுள்ள விரும்பத் தகாத கண்ணோட்டங்களுக்கு சில விரும்பத்தகாத காரணங்களும் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் ஆயுளுக்கும் நிலைக்கப் போகின்றன என்று நான் நினைக்கவில்லை. இது மாறி வரும் உலகம். அந்தந்த சமுதாயத்துப் பெரியவர்கள் குற்றங்கள் களைவதில் கட்டாயம் முனைப்புக் காட்டுவார்கள். இளைஞர்கள் புது உலகம் படைப்பார்கள் முன்பு போல் எல்லோரும் ஒரு தாய் மக்கள் போல வாழத்தான் போகிறோம்.வெள்ள நிவாரண சமயம் நாம் பார்த்த மனித நேயத்தை நான் மிகவே நம்புகிறேன்.
3.'நீங்க அழகா இருக்கீங்க 'கதையில் sexual
harassment கொடுக்கும்
ஆணுக்குக் கொடுக்கப் படும் தண்டனை தேவையா? பெண்களை அராஜகவாதிகளாக
மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.புத்திசாலியான அந்தப் பெண் மாற்று வழியில் அதைக்
கையாண்டிருக்கலாம் என்பது என் கருத்து .
இன்னொன்றும்
சொல்ல மறந்து விட்டேன்
'வடிவு' கதையில் வரும் சில தகாத
வார்த்தைகள். நாம் அடுத்தவர்கள் முன் சொல்லக் கூசும் வார்த்தைகளை அடுத்தவர்கள்
வாசிக்கக் கொடுப்பது சரியல்ல என்பது என் கொள்கை.......பீப் போட்டிருக்கலாம்.
தப்பில்லை!
அனிதா ராம்நாத்
ஆஸ்திரேலியா
Comments